மைத்திரியைச் சந்திக்க கொழும்பு சென்ற வடமாகாணசபை முதலமைச்சர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

198

வன்னி மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் நிறுவது தொடர்பில் தாண்டிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் ஒரு சிலரும்; எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக அணைவரது கருத்துக்களும் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரனால் செவிமடுக்கப்பட்டு ஒமந்தையில் அல்லது புலியங்குளத்தில் இந்த வர்த்தக மையம் நிர்மானிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானங்கள் அனைத்தையும் 28.04.2016 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்து அவரிடம் ஒப்புதல் பெறுவதற்காக முதலமைச்சர் கொழும்பு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியது தமிழ் அரசியல் வாதிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img_3700
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும், வடமாகாணசபை உறுப்பினர்களையும் அமைச்சர் சத்தியலிங்கம் ஒருங்கிணைத்து ஓமந்தையில் இந்த வர்த்தக மையம் அமைப்பதற்கு இருப்பதாக தீர்மானித்ததன் பின்னரே அமைச்சர் சந்தியலிங்கம் முதலமைச்சர் அவர்களிடம் இவ்விடயத்தைத் தெரிவித்தார். அதனைவிட யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பிலேயே மைத்திரிபால சிறிசேனா அவர்களைச் சந்தித்து இந்த நில ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் தெரிவித்திருந்தார்.
மே மாதக் கொண்டாட்டங்கள் இருப்பதன் காரணமாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்திக்கமுடியாமல் போனது எனவும் ஒரு சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணைவரது வேண்டு கோளின் படி இந்த வர்த்தக மையமானது வவுனியா பிரதேசத்திலேயே அமைக்கப்படவேண்டும் என்பதாகும்.

-நெற்றிப் பொறியன்-

SHARE