மைத்திரியை தாக்கிய வைரஸ் ரணிலையும் தாக்கியுள்ளது! குளறுபடியாகும் அரசியல்

246
article-urn-publicid-ap.org-4ff5eb23680340e4b8ed26c5cdd53368-GzbaTMIsSefd930c548c0ac26d9-146_634x441
மஹிந்தவின் வீழ்ச்சியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாக்கியுள்ள வைரஸ் தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலவரப்படி சுதந்திர கட்சிக்குள் மைத்திரி தரப்பு மற்றும் மஹிந்த தரப்பு என பிளவுபட்டுள்ளன. இவை நல்லாட்சி குழு மற்றும் மோசடி குழு என்ற ரீதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறான பிளவுகளை ஐக்கிய தேசிய கட்சிக்கும் பரப்புவதற்காக பிரதமருக்கு நெருக்கமானவர்கள் என காட்டிக் கொள்ளும் வைரஸ் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த சந்தர்ப்பத்தில் இந்த வைரஸ் முற்றாக தொற்றியிருந்தன. “தலைமைக் குழு“ என்ற மருந்தினால் இந்த வைரஸ் சற்று குணமாக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருக்கு பதிலாக எதிர்த்தரப்பு கட்சியின் செயலாளரை பொது வேட்பாளராக நியமித்த சந்தர்ப்பத்திலே இந்த குழுவாதம் எழும்புவதற்கு இருந்தது.

எனினும் தலைமைக் குழுவின் செயற்பாடு சிறப்பாக இருந்தமையினால் முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் தலைமைக் குழுவின் மருந்தை திஸ்ஸ அத்தநாயக மாத்திரம் பெற்றுக்கொள்ளவில்லை.

அன்று மிகவும் சிக்கலான சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றி கொண்டு அவருடன் இருந்த தலைவர்களை பிரதமரிடமிருந்து பிரிப்பது தற்போதைய வைரஸ்களின் சூழ்ச்சியாகும். இந்த வைரஸ்கள் தாங்கள் பிரதமருடன் நெருக்கமாக செயற்படுவதாக பிரச்சாரம் செய்து வருகின்றது.

இவர்களின் சூழ்ச்சிகளுக்கமைய கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட அமைச்சுகளை பெற்றுகொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள், அமைச்சின் சிறிய விடயங்களை பெரிய விடயமாக மாற்றி ஊடகங்கள் வாயிலாக போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கபட்டு வருவதுடன், இவை பிரதமரினால் கற்பிக்கப்பட்டவை எனவும் குறிப்பிடப்பட்டு வருகிறது.

சில அமைச்சர்களுக்கு தங்களால் அமைச்சினை நடத்தி செல்ல முடியாத வகையில் அவற்றில் முக்கிய பிரிவுகளை வேறு அமைச்சிடம் ஒப்படைப்பதே மற்றுமொரு சூழச்சியாகும்.

தற்போது வரையில் தலைமை குழுவை ஆக்கிரமித்துள்ள நிலையில் சூழச்சிகாரர்கள் எனப்படும் வைரஸ் பலமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE