மைத்திரி அரசுக்கு ஆபத்து! மஹிந்த அணிக்கு தாவ தயாராகும் அமைச்சர்கள்

224
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
mahinda-mithri
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது அமைச்சு பதவியை கைவிட்டு செல்வதற்கு, குறித்த உறுப்பினர்கள் ஆயத்தமாக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில அரசியல் ரீதியில் தீர்மானமிக்க தினத்தில் இந்த கட்சி தாவல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதற்கு முன்னர் முன்னணி மற்றும் சுதந்திர கட்சியில் பதவி வகித்த தற்போதைய அமைச்சர்கள் இருவர், தங்கள் பதவியை இராஜினாமா செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளமையும் அதன் ஊடாக இடம்பெறவுள்ளது.

குறித்த இருவரும் கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்ட உறுப்பினர்களாகும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

SHARE