கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, நான் தோல்வியடைந்த பின்னர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தன்னிடம் இருந்து பலவந்தமாக பறித்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைமைத்துவத்தை எந்த சந்தர்ப்பத்திலும் தான் மைத்திரியிடம் வழங்கவில்லை எனவும் பழைய மத்திய செயற்குழு இருக்கும் போது,மைத்திரி புதிய செயற்குழுவை நியமித்தர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவு ஆரம்பித்து விட்டது. இரண்டு முறை தோற்றதால் விலக வேண்டும் என்று கூறினாலும் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு கடந்த பொதுத் தேர்தலில் தனது தொகுதியில் தோல்வியை சந்தித்தாகவும் தான் தலைமைத்துவத்தில் இருந்த போது இரண்டு முறை தோற்கவில்லை எனவும் ஒரு முறை மாத்திரமே தோற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.