மைத்திரி – மகிந்த சந்திப்பிற்கு முன் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தை

322

 

மைத்திரி – மகிந்த கலந்துரையாடலுக்கு முன்னர் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தயைில் ஈடுப்பட்டதாக அரசு உளவுத்துறை ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு இவ்வாறு தகவல் வழங்கியுள்ள நிலையில் அவர்கள் மீதான நம்பிக்கை குறித்து பாரிய குழப்பநிலை தோன்றியுள்ளதாக பிரதான அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த குழு மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் குறித்து அரசு உளவுத்துறையினால் வெளியிட்ட தகவலுக்கமைய அதற்கு அடுத்த நாள் மைத்திரி – மகிந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி சார்பில் சந்திப்பில் கலந்துரையாடுவதற்கான பிரதிநிதிகள் உடனடியாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இங்கு ஜனாதிபதி தேர்தலின் போது தன்னுடன் கட்சி தாவல் ஒன்றை ஏற்படுத்தி கொள்வதற்கு ஒன்றிணைந்த எம்.கே.டி.எஸ் குணவர்தன, ராஜித சேனாரத்ன, துமிந்த திசாநாயக்க, மற்றும் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் குறித்த சந்திப்பில் பிரதிநிதிகளை ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டுள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை புண்ணியத்திற்கான பிரதமர் எனும் அமைச்சர் டிலான் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட கருத்து ஜனாதிபதியின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது

SHARE