மொத்தமாக குறைந்த லியோ வசூல்.. 21 நாட்கள் முடிவில் எவ்வளவு தெரியுமா

114

 

லியோ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட மக்களின் பேராதரவு காரணமாக வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மடோனா, மிஸ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வசூல்
முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த லியோவின் 21 நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் 21 நாட்கள் முடிவில் ரூ. 578 கோடி வரை வசூல் செய்துள்ளது.

20 நாட்கள் முடிவில் ரூ. 577 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்த லியோ, அடுத்த ஒரு நாளில் ரூ. 1 கோடி வரை மட்டுமே வசூல் செய்து 21 நாட்களில் ரூ. 578 கோடி வரை வந்துள்ளது. இதன்மூலம் லியோ படத்தின் வசூல் படுபயங்கரமாக குறைய துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE