அஜித் தற்போது பலரும் விரும்பும் நடிகராகிவிட்டார். அவருக்கான மாஸ் கூடிக்கொண்டே தான் போகிறது. தற்போது அவர் சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் கூட்டணியில் கடந்த முறை வெளியான படம் விவேகம். தமிழில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் நல்ல கலெக்சனை அள்ளினாலும் படத்திற்கு கொஞ்சம் நஷ்டம் தான்.
அதே வேளையில் ஹிந்தியில் வெளியான டப்பிங் வெர்சன் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதெல்லாம் டிவியில் வார இறுதியானால் கொண்டாட்டம் தான். முன்னணி நடிகர்களின் அண்மைகால படங்களை ஒளிபரப்புகிறார்கள்.
இந்த வாரம் முன்னணி மலையாள சானலில் விவேகம் படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புகிறார்கள்.