மொனறாகலையில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை: பொலிஸார் சுற்றிவளைப்பு

337

மொனறாகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாறு பிரதேசத்தில், சட்டவிரோதமாக இயங்கிவந்த துப்பாக்கி தொழிற்சாலையொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 14 துப்பாக்கிகள், ரவைகள், இவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர், தமது வீட்டின் ஒரு பகுதியில் இரகசியமான முறையில் குறித்த துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளதாக மொனறாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

illegal-gun

SHARE