மொரட்டுவை -சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து – சப்புகஸ்கந்தையில் தீ விபத்து

261

மொரட்டுவை-சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் தீவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Tamil-Daily-News-Paper_97917902470

இன்று முற்பகல் வேளையிலேயே இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயானது தற்போது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த தீவிபத்தினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின் ஒழுக்கால் தொழிற்சாலை களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சப்புகஸ்கந்த – ஹெய்யன்துட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையிலேயே குறித்த தீப்பரவல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,மின்ஒழுக்கே இதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால் தீ பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இன்னும் அறியமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE