பெண்களுக்கான டென்னிஸ் சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட டென்னிஸ் தொடரான மொஸ்கோ பகிரங்க தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் ரஷ்யாவின் அனாஸ்டாசியா போட்டோபோவா மற்றும் செர்பியாவின் டேனிலோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
இருவரும் 17 வயதே நிரம்பிய இளம் வீராங்கனைகள்தான். இதில் 7-–5, 6-–7 (1–7), 6–-4 என டேனிலோவிச் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரை வென்ற 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த வீராங்கனை (17 வயது 7 மாதம்) என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு குரோஷியாவைச் சேர்ந்த அனா கோன்ஜுஹ் நாட்டிங்காம் பகிரங்கத்தை வென்று இளம் வயதில் சாதனை படைத்திருந்தார். அதன்பின் தற்போது டேனிலோவிச் சாதித்துள்ளார்.
கடந்த 2005- ஆம் ஆண்டு ஜப்பான் பகிரங்க டென்னிஸ் தொடரில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.