இன்று வரை ஏராளமான இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.
அழகு, அசாத்திய நடிப்பால் தனது தாய்நாட்டை மட்டுமல்லால் ஹாலிவுட் உலகையும் கலக்கி வருகிறார்.
இப்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் இவர், சில நேரங்களில் தனது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஆடைகள் மட்டுமின்றி, லிப்ஸ்டிக் மற்றும் அணிகலன்களை கூட தெரிவுசெய்வது சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகின்றன.
சமீபத்தில் கூட கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இவர், பர்ப்பிள் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.
ஐஸ்வர்யா தனது படத்தின் ப்ரமோஷனுக்காகவே இவ்வாறு செய்துள்ளார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல பேஷன் என்ற பெயரில் ஐஸ்வர்யா ராய் சில தவறான வழிகளை பின்பற்றியுள்ளார்.