மோசமான நிலைமையில் எமி.!

160

தமிழ் சினிமாவில் விரல் விட்டு என்ன கூடிய வகையில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் எமி ஜாக்சன்.இவர் தமிழிலும் இதுவரை பிரபலம் அடைந்த கதாநாயகர்கள் கூட மட்டுமமே நடித்து இருக்கிறார்.மேலும் இவரை படத்தில் ஒப்பந்தம் செய்வதும் சிறிது கடினம்தான்.

காரணம், மெல்லிய உடல் தோற்றமும், பால் போன்ற வெள்ளை நிறமும் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களின் பட்டாளமும்தான்.

ஆனால் தற்போது இவரின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் இவருக்கு இந்த படம் வெளிவந்ததும் தென் இந்திய மொழிகளிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவோடு சென்னையில் குடியேறினார்.

ஆனால் இப்படத்திற்கு நிலவும் சில பிரச்சனைகளால் அது நிறைவேறாது போலிருக்கிறது என அச்சம் அடைந்துள்ளார் .இந்நிலையில்,சமீபத்தில் கன்னட படம் ஒன்றில் நடிக்க வந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.எதுவும் கிடைக்காததற்கு ஏதோ கிடைத்தால் போதும் என்று நினைப்பதாகவும்,தமிழில் ரஜினி போன்ற பிரபலங்களுடன் நடித்த எமி தற்போது குறைந்த சம்பளத்திற்கு இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டது சற்று சிரிப்பாக இருக்கிறது என்று கோலிவுட் நடிகைகளின் கருத்து.

SHARE