மோடியின் அதிரடி நடவடிக்கை

204

கறுப்பு பணத்திற்கு எதிராக இந்திய பிரதமர் எடுத்த முடிவை பிரித்தானியா பாராட்டியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 500, 1000 நாணய தாள்களை புழக்கத்தில் இல்லாமல் செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கையை பிரித்தானியாவின் சர்வதேச வளர்ச்சி துறை அமைச்சர் பிரீத்தி படேல் பாராட்டி பேசியுள்ளார்.

மோடி போன்ற திடமான நடவடிக்கை, உலக நாடுகளுக்கும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில், சட்ட விரோதமான பணப்புழக்கம் உள்ளது. அந்தப் பணம், முறைகேடான பரிவர்த்தனைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தான் பயன்படுத்தப்படுகிறது. அதை கட்டுப்படுத்த, பிரதமர் மோடி எடுத்தது போன்ற வலுவான நடவடிக்கை அவசியம் என மேலும் தெரிவித்துள்ளார்.

narendra_modi1

SHARE