500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியின் அதிரடி அறிவிப்பால் உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் நெஞ்சுவலியால் இறந்துள்ளார்.
நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கேட்டவுடன் 65 வயது பாட்டி ஒருவர், தன்னிடம் வைத்திருந்த பணத்தினை வங்கியில் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.&
ஆனால், அங்கு வங்கி பூட்டியிருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்த இவர் தனது பணத்தினை வங்கியில் செலுத்த முடியாமல் வாசல்படியிலேயே அமர்ந்து நெஞ்சுவலியால் உயிரை விட்டுள்ளார்.