இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தினால் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை இல்லையென வடமாகாண மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் இந்திய பிரதமரின் வருகையினால் தீர்வு கிடைக்கும் என நிச்சயமில்லை,
அவரின் இலங்கை விஜயத்தினால் அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த வரையறைகளுக்குள்ளேயே இருக்கும் என மீனவ தலைவர் என்.எம்.எம்.ஆலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்திய பிரதமரின் ஒரேயொரு விஜயத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.