மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள்

320

 

 

How-qandeel-was killed by his brother-shot dead in Multan

இந்நிலையில்தான் 15-07-2016 வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்[1]. சனிக்கிழமை என்று சில பாகிஸ்தான் நாளிதழ்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார் என்கிறது தமிழ்.பிபிசி[2]. பாகிஸ்தானிலேயே, முதலில் அவள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்று செய்திகள் வெளியாகின[3]. அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[4]. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வந்த போலீசார், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர். பிபிசியின் படி “ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்”, என்றால், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர் என்பது சரியாக இருக்க முடியும். இது வெள்ளிக்கிழமையில் நடந்த ஜிஹாதி கொலை என்பதனை மறைக்க முயல்வது போல தெரிகிறது.

Qanteel Bloch - brother killerகொலைசெய்த சகோதரன் கூறியது: கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது, “எனது தங்கைக்குமயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுதுகழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூகவலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள் மூலம்எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கிவிட்டாள். பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்[5].மேலும் மதகுரு முஃதி காவியுடன் அவள் புகைப்படம்எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான்அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்குமயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டுஅவள் உறங்கும் பொழுது கழுத்தைநெறித்துக் கொன்றேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்[6]. இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின் தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சாசாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணனே பலோச்சை ஆணவக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்[7]. பாகிஸ்தானில், சமீபத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது[8]. ஆண்டொன்றுக்கு 100க்கும் மேலான கொலைகள் நடக்கின்றன.

qandeel marriage certificateகௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?: பாகிஸ்தானிய ஊடகங்களே இக்கொலையை பலவிதமாகச் சித்தரித்துள்ளன. மனித உரிமை குழுக்கள் இதனை கௌரவக் கொலையாக கருதுகின்றன. இதனை எதிர்த்து ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், குவான்தீன் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து மாடல், நடிகை என்றெல்லாம் உலா வந்ததாலும், பேஸ்புக்கில் பலரை விமர்சித்ததாலும், அவள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தாள் என்று மதவாதிகள் தீர்மானித்திருந்தனர். அந்நிலையில் அவள் கொலை செய்யப் பட்டிருந்தால், அதனை மதக்கொலை எனலாம். ஆசார இஸ்லாத்தை நீர்த்தாள், பர்தாவிலிருந்து வெளிவந்தாள், ஹிஜாபை துறந்தாள், இஸ்லாமாக வாழவில்லை என்று அவளை அடுக்கடுக்காக குறைகூறி குற்றஞ்சாட்டியுள்ளனர். அவளது சகோதரன் கொடுத்த விளக்கம், மற்றும், அவளை கொலை செய்தலால், சுவர்க்கத்தின் கதவு தனக்காக திறந்திருக்கிறது என்றேல்லாம் பேசியதைப் பார்த்தால், இது ஒரு ஜிஹாதி கொலை என்று தோன்றுகிறது[9]. “அவளைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனவருத்தத்தை நீக்கியதற்காக, சுவர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளேன். நான் என்னுடைய குடும்ப மானத்தைக் காத்துள்ளேன், நான் எந்த டண்டனைக்கும் தயாராக உள்ளேன்”, என்றான்[10]. ஆக ஒரு ஜிஹாதி பேசுவதைப் போல பேசியுள்ளான்[11].

Qandeel-Baloch-admits-her-marriageகுவான்தீல் பலூச்சின் வீடியோ பேச்சுகள்: பாகிஸ்தான் ட்ரிப்யூன் கீழ்கண்ட ஐந்து வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது[12]. பொறுமையாக அவற்றை கேட்கும் போது, ஒரு முஸ்லிம் என்ற நிலையில் அவர் பேசியுள்ளது தெரிகிறது. அவளது சகோதரன், இவற்றைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் கொன்றிருக்க மாட்டான். ஆனால், அதே நேரத்தில் அடிப்படைவாத முஸ்லிம், ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாக, அறிவாளியாக இருப்பதையும் விரும்பியிருக்க மாட்டான்.கஊழலைத் தட்டிக் கேட்டதால், அரசியல்வாதிகளும் அதிருப்தி அடைந்திருப்பார்கள்.

SHARE