பிரபல மாடலும் நடிகையுமான மேக்னா படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் மாடலும், நடிகையுமான மேக்னா படேல். டிவி சீரியல்களிலும், அரை நிர்வாணமாகவும் பாலிவுட்டில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், காதலில் விழுந்தேன் படத்தில் வரும் நாக்க முக்கா பாடலுக்கு குத்தாட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கினார். மோடி அலை வீசிய அந்த நேரத்தில் தாமரை மலர்களை தன் உடல் மீது போர்த்தி போஸ் கொடுத்தார்.
மோடி படத்தை மட்டும் தன் உடல் மீது வைத்துக்கொண்டு பாஜகவிற்கு வாக்கு சேகரித்தார் மேக்னா படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தி, போஜ்பூரி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மேஹ்னா, தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்.சி.பி) இணைந்துள்ளார் என்று மூத்த என்.சி.பி. தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். மேக்னா படேல் போஸ் நாடாளுமன்ற தேர்தலின் போது மேக்னா கொடுத்த அரை நிர்வாண போஸ்கள் பிரபலம். ஒரு கையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பிடித்துக் கொண்டு பா.ஜ.க கட்சி சின்னத்தை தனது உடம்பில் அமைத்துக்கொண்டும் வாக்கு சேகரித்தார். கட்சி மாறியது ஏன்? பாஜகவில் பல நடிகைகள் இணைந்து எம்.பி., எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளனர். சில நடிகைகள் அமைச்சர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேக்னா நாயுடு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக ஆதரவாளராக இருந்து விட்டு தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் 2017ம் ஆண்டு நடக்க உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் வதோதரா தொகுதியில் என்.சி.பி. கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அப்போ இனி கடிகாரத்தை கையில் பிடித்தபடி போஸ் கொடுப்பாரோ?.