மோடி வரலாறு இந்தியப்பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அர்த்தமற்றது-கடந்தகால வரவில் நடந்தது என்ன?ஒருபார்வை

275

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்­கொண்ட அந்தப் பய­ணத் தின் போது தான், இந்­திய, – இலங்கை சமா­தான உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அது­மட்டு­மன்றி, ராஜீவ்­காந்­திக்கு வழங்­கப்­பட்ட அணி­ வ­குப்பு மரி­யாதையின் போது, கடற்­படைச் சிப்பாய் ஒருவர் அவர் மீது நடத்­திய தாக்­கு­தலும், வர­லாற்றில் முக்­கிய பதி­வா­கி­யது. அதற்குப் பின்னர், நேற்று முன்­தினம், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்­தியப் பிர­தமர் எவரும் இலங்­கைக்கு அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி 1987ஆம் ஆண்டு இலங்­கைக்கு மேற்­கொண்ட அர­சு­முறைப் பய­ணத்­துக்குப் பின்னர், கிட்­டத்­தட்ட 28 ஆண்­டுகள் கழித்து, இந்­தி யப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்­கைக்­கான அர­சு­முறைப் பய ணம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்­கொண்ட அந்தப் பய­ணத் தின் போது தான், இந்­திய, – இலங்கை சமா­தான உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அது­மட்டு­மன்றி, ராஜீவ்­காந்­திக்கு வழங்­கப்­பட்ட அணி­ வ­குப்பு மரி­யாதையின் போது, கடற்­படைச் சிப்பாய் ஒருவர் அவர் மீது நடத்­திய தாக்­கு­தலும், வர­லாற்றில் முக்­கிய பதி­வா­கி­யது. அதற்குப் பின்னர், நேற்று முன்­தினம், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்­தியப் பிர­தமர் எவரும் இலங்­கைக்கு அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி 1987ஆம் ஆண்டு இலங்­கைக்கு மேற்­கொண்ட அர­சு­முறைப் பய­ணத்­துக்குப் பின்னர், கிட்­டத்­தட்ட 28 ஆண்­டுகள் கழித்து, இந்­தி யப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்­கைக்­கான அர­சு­முறைப் பய ணம் இடம்­பெற்­றுள்­ளது.

நேற்­று­முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்கி, நேற்­றி­ரவு இங்­கி­ருந்து புறப்­பட்டுச் சென்­றது வரை­யா­ன அவ­ரது இர ண்டு நாள் இலங்கைப் பயணம், வரலாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒன்­றாக அமைந்­தி­ருக்­கி­றது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி சுதந்­திரம் பெற்ற இந்­தி­யா­வுக்கும், அதை­ய­டுத்து, 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 4 ஆம் திகதி சுதந்­திரம் பெற்ற இலங்­கைக்கும் இடை யில், நீண்­ட­கா­ல­மா­கவே நெருக்­க­மான உறவும் வர­லாற்றுத் தொடர்­பு­களும் இருந்து வந்­துள்­ளன.

மிக அரு­க­ரு­காக, சிறி­ய­தொரு நீரி­ணையால் பிரிக்­கப்­பட்­டி­ருக்கும், இந்­தியப் பெரு நிலப்­ப­ரப்பும், இலங்கைச் சிறு­தீவும், சுதந்­தி­ரத்­துக்குப் பிற்­பட்ட காலத்தில், அர­சியல், பொரு­ளா­தார, வர்த்­தக, கலா­சார உற­வு­களால் எப்­போதும், பிணைந்தே இருந்து வந்­துள்­ளன.

இலங்­கையில் ஏற்­படக்கூடிய நிகழ்­வுகள் அல்­லது மாற்­றங்கள், இந்­தி­யா­விலும், இந்­தி­யாவில் நிகழும் மாற்­றங்கள் இலங்­கை­யிலும் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் அள­ வுக்கு இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களில், நெருக்கம் காணப்­பட்­டி­ருக்­கி­ றது.

இந்­தி­யாவும் இலங்­கையும் பிரித்­தா­னிய ஆட்­சியில் இருந்து சுதந்­திரம் பெற்ற பின்னர், கடந்த ஆறு தசாப்த காலத்தில், இந்­தியத் தலை­வர்­களின் இலங்கைப் பய­ணங்கள் எப்­போ­துமே முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக விளங்­கி­யி­ருக்­கின்­றன.

இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­னரே, இந்­தியத் தலை­வர்­களின் இலங்கைப் பய­ணங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

அதில், இந்­தி­யாவின் தேச­பிதா என்று அழைக்­கப்­படும் மகாத்மா காந்தி 1927 ஆம் ஆண்டு மேற்­கொண்ட பயணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும்.

அவ­ரது முதலும், கடை­சி­யு­மான பய ணம் அது. அப்­போது அவர் மூன்று வாரங்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்தார்.

அவர் இலங்­கையில் இருந்த போது, கொழும்பு, கண்டி, யாழ்ப்­பாணம், நுவ­ரெ­லிய, காலி, மாத்­தளை, பதுளை, பண்­டா­ர­வளை, ஹற்றன், பருத்­தித்­துறை, சிலாபம் ஆகிய இடங்­க­ளுக்குச் சென்று 31 கூட்­டங்­களில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

இந்­தி­யா­விலும், இலங்­கை­யிலும், சுதந்­தி­ரத்­துக்­கான போராட்­டங்கள் நடந்து கொண்­டி­ருந்த காலத்தில் அவ­ரது அந்தப் பயணம் அமைந்­தி­ருந்­தது.

அதை­ய­டுத்து, 1931 ஆம் ஆண்டு, ஜவ­ஹர்லால் நேரு, இலங்­கைக்கு தனது முதல் பய­ணத்தை மேற்­கொண்டார்.

மனைவி கமலா, மகள் இந்­தி­ரா­வுடன் அவர் நுவ­ரெ­லி­யாவில், விடு­மு­றையைக் கழிப்­ப­தற்­காக அப்­போது வந்­தி­ருந்தார். அப்­போது, நேரு பிர­த­ம­ரா­க­வில்லை.

இந்­தியா சுதந்­திரம் பெற்ற பின்னர், இந்­தியப் பிர­தமர் பத­வி­களை அலங்­க­ரித்த ஜவ­ஹர்லால் நேரு­வுக்கும், இந்­திரா காந்­திக்கும், அதுவே முதல் இலங்கைப் பய­ண­மாக அமைந்­தது.

எனினும், அது ஒரு அதி­கா­ர­பூர்வ அர­சு­முறைப் பயணம் அல்ல.

இந்­தி­யாவும், இலங்­கையும் சுதந்­திரம் பெற்ற பின்னர், இரு நாடு­க­ளுக்கும் இடையில் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

முதல்­மு­றை­யாக இந்­தியப் பிர­தமர் ஒரு­வரின் அர­சு­முறை இலங்கைப் பயணம் இடம்­பெற்­றது 1950 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆகும்.

இந்­தி­யாவின் முதல் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற ஜவ­ஹர்லால் நேரு இலங்­கைக்கு மேற்­கொண்ட அந்தப் பய­ணத்தின் போது, பல்­வேறு இடங்­களில் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

பின்னர், 1957 ஆம் ஆண்டு மே மாதம், புத்­த­பெ­ருமான் அவ­த­ரித்த 2500 ஆண்­டுகள் நிறை­வ­டை­வ­தை­யொட்டி. இலங்­கையில் நடத்­தப்­பட்ட நிகழ்­வு­களில் பங்­கேற்­ப­தற்­காக இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ஜவ­ஹர்லால் நேரு, மீண்டும் இலங்கை வந்­தி­ருந்தார்.

அப்­போது அவ­ருடன் கூடவே, இந்­தி­ரா­காந்­தியும் இலங்கை வந்தார்.

அநு­ரா­த­பு­ரத்தில் நடந்த வெசாக் நிகழ்­வு­களில் பங்­கேற்­ப­தற்­காக அவர்கள் சிறப்பு ரயிலில் அங்கு பயணம் செய்­தனர்.

அநு­ரா­த­பு­ரத்தில் புத்த ஜெயந்­தியை முன்­னிட்டு அமைக்­கப்­பட்ட புதிய நக­ர­மான ஜெயந்தி மாவத்­தை­யையும் அப்­போது இந்­தியப் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு திறந்து வைத்­தி­ருந்தார்.

மீண்டும், 1962 ஆம் ஆண்டு, ஒக்­ரோபர் மாதம் இந்­தியப் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு, இலங்­கைக்கு மற்­றொரு அரசு முறைப் பய­ணத்தை மேற்­கொண்டார்.

அந்தப் பய­ணத்தின் போது, இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் அவர் 1962 ஆம் ஆண்டு, ஒக்­ரோபர் 23 ஆம் திகதி உரை­யாற்­றினார்.

அதுவே இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் இந்­தியத் தலைவர் ஒருவர் நிகழ்த்­திய முத­லா­வது உரை­யாகும்.

ஜவ­ஹர்லால் நேரு­வுக்குப் பின்னர், இந்­தியப் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற இந்­தி­ரா­காந்தி, இலங்­கைக்கு இரண்டு முறை அர­சு­முறைப் பய­ணங்­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

1967 ஆம் ஆண்டு செப்­ரெம்பர் 18 ஆம் திகதி தொடக்கம், 21 ஆம் திகதி வரை­யான, காலப் பகு­தியில், இந்­திரா காந்­தியின் முத­லா­வது அர­சு­ முறைப் பயணம் இடம்­பெற்­றி­ருந்­தது.

இரண்­டா­வது முறை­யாக, இந்­தியப் பிர­தமர் இந்­தி­ரா­காந்தி, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இலங்­கையில் அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

அப்­போது, 1973 ஏப்ரல் 28 ஆம் திகதி, இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் இந்­திரா காந்­தியின் உரை இடம்­பெற்­றது.

இந்­தி­ரா­காந்­தியை அடுத்து, இந்­தியப் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற மொராய்ஜி தேசாய் 1979 ஆம் ஆண்டில் இலங்­கைக்கு அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அப்­போது, 1979 பெப்­ர­வரி, 06 ஆம் திகதி அவர் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றினார். அதற்குப் பின்னர், 1987 ஆம் ஆண்டு தான், இந்­தியப் பிர­தமர் ஒரு­வரின், இலங்­கைக்­கான அர­சு­முறைப் பயணம் இடம்­பெற்­றது.

இந்­தியப் பிர­த­ம­ராக இருந்த ராஜீவ்­காந்தி 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்­கொண்ட அந்தப் பய­ணத்

தின் போது, தான், இந்­திய, – இலங் கை சமா­தான உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

அது­மட்­டு­மன்றி, ராஜீவ்­காந்­திக்கு வழங்­கப்­பட்ட அணி­வ­குப்பு மரி­யாதையின் போது, கடற்­படைச் சிப் பாய் ஒருவர் அவர் மீது நடத்­திய தாக்­கு­தலும், வர­லாற்றில் முக்­கிய பதி­வா­கி­யது.

அதற்குப் பின்னர், நேற்று முன்­தினம், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்­தியப் பிர­தமர் எவரும் இலங்­கைக்கு அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

ராஜீவ்­காந்­திக்குப் பின்னர், வி.பி.சிங், சந்­தி­ர­சேகர், தேவ­கௌடா, பி.வி.நர­சிம்­மராவ், ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்­மோகன் சிங் போன்­ ற­வர்கள் இந்­தியப் பிர­த­ம­ராகப் பத­வியில் இருந்த போதும், அவர்கள் இலங்­கைக்கு அர­சு­முறைப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை.

சார்க் மாநாட்­டுக்­காக இந்­தியப் பிர­த­மர்கள் இலங்­கைக்கு வந்­தி­ருந்த போதும், அது இரு­த­ரப்பு அர­சு­முறைப் பய­ண­மாக இருக்­க­வில்லை.

அயல்­நா­டாக இருந்த போதிலும், இந்­தியப் பிர­த­மர்­களால் 28 ஆண்­டு­க­ளாக புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்த இலங்­கைக்­கான அர­சு­முறைப் பய­ணத்தை, மீண்டும் ஆரம்­பித்து வைத்­தி­ருக்­கிறார் நரேந்­திர மோடி.

அது­மட்­டு­மன்றி, 1979 ஆம் ஆண்­டுக்கு, மொராய்ஜி தேசாய் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய உரைக்குப் பின்னர், நரேந்­திர மோடியின் உரை கடந்த வெள்­ளிக்­கி­ழமை இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இந்தப் பயணம் பல்­வேறு வர­லாற்று அத்­தி­யா­யங்­களை எழுதி வைத்­தி­ருக்­கி­றது.

இலங்­கையில் அதிக இடங்­க­ளுக்கு சென்ற இந்­தியப் பிர­தமர் என்ற வர­லாற்­றையும் அவர் எழு­தி­யி­ருக்­கிறார்.

இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் பயணம் செய்த ஒரு இந்­தியத் தலைவர் என்ற பெரு­மையை மகாத்மா காந்தி ஒருவர் மட்டும் தான், வைத்­தி­ருந்தார்.

அவர் அர­சி­யல்­வா­தி­யாக இல்­லா­விட்­டாலும், ஒரு சுதந்­திரப் போராட்ட வீர­ராக, இலங்கைத் தீவின் பல பகு­தி­க­ளையும் சுற்றி வந்­தி­ருந்தார்.

அதற்குப் பின்னர், ஜவ­ஹர்லால் நேரு, இந்­திரா காந்தி போன்­ற­வர்கள், அர­சு­முறைப் பய­ணத்தின் போதும், தனிப்­பட்ட பண­யத்தின் போதும், அனு­ரா­த­புரம் நுவ­ரெ­லியா, கண்டி போன்ற இடங்­க­ளுக்குச் சென்­றி­ருந்­தாலும், வடக்­கிற்குச் சென்­ற­தில்லை.

எனினும், 1959 ஆம் ஆண்டு ஜுன் 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை இலங்­கையில் பயணம் மேற்­கொண்­டி­ருந்த, இந்­திய ஜனா­தி­ப­தி­யாக இருந்த டாக்டர் ராஜேந்­திர பிரசாத், யாழ்ப்­பா­ணத்­துக்கும் பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.

அவ­ருக்குப் பின்னர் மோடி தான், யாழ்ப்­பா­ணத்­துக்குச் சென்ற முதல் இந்­தியத் தலை­வ­ராவார்.

வடக்கு மாகா­ணத்தின், யாழ்ப்­பாணம், மன்னார் போன்ற இடங்­க­ளுக்கு பயணம் மேற்­கொண்ட ஒரே இந்­தியப் பிர­தமர் என்ற பெருமை நரேந்­திர மோடி­யையே சாரும்.

ராஜீவ்­காந்­திக்கும், நரேந்­திர மோடிக்கும் இடைப்­பட்ட காலத்தில், இந்­திய – இலங்கை உற­வு­க­ளிலும் பல ஏற்ற இறக்­கங்கள் இருந்­தன.

இந்தக் கால­கட்டம் தான் இலங்­கையில் போர் உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யி­ருந்த கால­மாகும்.

போரில் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் பங்­க­ளித்த இந்­தியா, போருக்குப் பிந்­திய இலங்­கையில், பல்­வேறு உதவித் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் பய­ணத்தின் மூலம், இலங்­கை­யுடன் இந்­தியா தனது நெருக்­கத்தை மட்டும் வலுப்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

அதற்கும் அப்பால், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கையும் உடைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில், சீனாவின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்திருந்தது.

அதன் விளைவாக, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு திடீரென அதிகரித்ததுடன், இந்தியா எதையும் செய்ய முடியாததொரு நெருக்கடிக்குள்ளும் சிக்கியிருந்தது.

ஆனால், ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையும், இந்த நிலையை முற்றாகவே மாற்றியமைத்திருக்கிறது.

இரு தரப்பு உறவுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது நரேந்திர மோடியின் இந்தப் பயணம்.

இது இருநாடுகளுக்குமே நன்மையளிப்பதாக இருந்தாலும், இந்தியா அடையப்போகும் அனுகூலங்கள் தான் அதிகமாக இருக்கும்.

அதனைக் காலப்போக்கில் அனைவரும் உணரமுடியும்.
இந்தியாவின் ‘இரும்பு மனிதராக’ போற்றப்படும் வல்லபாய் படேலை போல, துணிச்சலாக பல முடிவுகளை எடுக்கக் கூடியவர் மோடி. குஜராத் வளர்ச்சியில் இதை நிரூபித்துள்ள இவர், இரண்டாவது ‘இரும்பு மனிதராக’ ஜொலிக்கிறார்.

இந்தியாவின் 14வது பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை, பட்டு விரிப்பிலும், பண செழிப்பிலும் திளைத்தது அல்ல! தன் பாதையல் கண்ட கரடு, முரடான கற்களை கூட, சிலைகளாய் மாற்றிதன் பின்னால் வருவோரின் பயணத்தை ரசனையாக்கியவர். ஒவ்வொரு முறை உயரத்திற்கு வரும் போதும், தான் கீழிருந்த போது இருந்த அதே மனநிலையும், அணுகுமுறையும் தான் மோடியை இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவை சுமக்கவிருக்கும் அந்த இரண்டெழுத்து நாயகனின் வாழ்க்கை வரலாற்றை, திரும்பி பார்ப்போம்.இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தலைமை வகிக்க போகும் விருட்சத்திற்கான விதை, 1950 செப்டம்பர் 17ல் விதைக்கப்பட்டது. இன்று இந்தியாவின் மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் வேரூரின்றிய அந்த விதையின் பெயர் நரேந்திர மோடி.

பிறப்பில் வறுமை

குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தின் வட்நகரில், தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி–ஹீராபேன் தம்பதிகளின் மூன்றாவது குழந்தை தான், இன்றுஇந்தியாவின் “முதல்வன்’.காரும், தேரும் கண்ட குடும்பம் அல்ல அது; ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவை உறுதிசெய்ய உழைப்பால்வியர்வையில் நீந்திய குடும்பம். உடன்பிறப்புகள் ஆறுபேரில் அப்போதே கெட்டிக்காரர் மோடி.வட்நகர் பள்ளியில் தன் கல்வியை தொடங்கிய காலத்திலிருந்தே புத்தகத்தோடு, தன் குடும்ப வறுமையையும் சுமக்கத் தொடங்கியவர். அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் டீ கடைநடத்திய தந்தைக்கு உதவியாக, மோடியும் ‘டீ கிளாஸ்’ பிடித்தார்.

சிறுவன் மோடியின் பெரிய மனம்!

சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்திலும், ஆற்றலிலும் தேர்ந்திருந்த மோடி, தனது எட்டாவது வயதில் ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்தார். தான் எதைத் தொட்டாலும் அதில் ஈடுபாடுகாட்டும் மோடி, “அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ எனும் மாணவர் குழுவின் தலைவரானார்.1967ல் குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மக்கள் தவித்த போது, 17வயது சிறுவர்கள் எல்லாம் வீட்டில் பெற்றோர் அரவணைப்பில் பதுங்கிய போது, துணிச்சலோடு நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அந்த அரைகால் டவுசர் சிறுவனை குஜராத் வரலாறு மறக்கவில்லை. அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு, அப்போதே தான் மக்களுக்காக பிறந்தவன் என்பதை நிரூபித்தார் சிறுவன் மோடி.

அரசியல் அறிவு

அரசியலில் மோடிக்கு இருந்த ஆர்வம், குஜராத் பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் அவரை பட்டம் பெற வைத்தது. அரசியலை அனுபவத்திலும், அறிவியல் வழியிலும் பெற்றதால், மோடியின் எண்ணங்கள் பிற அரசியல் வாதிகளிடமிருந்து வேறுபட்டது. இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், போராட்ட களத்தில் தன்கால்தடத்தை வலுவாய் பதித்த மோடிக்கு, பிற தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.எத்தனையோ ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்த அந்த களத்தில், மோடியை மட்டும் தனித்து காட்டியது அவரது ஆர்வம். தன்னலமற்ற அந்த ஈடுபாட்டை, அப்போதைய அனைத்து கட்சியினரும் பாராட்டினர். அதுவே பா.ஜ.,யின் உறுப்பினராக மோடியை உயர்த்தியது.

பா.ஜ.,வின் பாயும் புலி

பா.ஜ.,வின் சாதாரண உறுப்பினராக கட்சிப்பணியில் கலக்கிய மோடி, ஒரே ஆண்டில் குஜராத் மாநிலத்தின் பா.ஜ., பொதுச்செயலாளராக உயர்ந்தார். அடுத்தடுத்து பா.ஜ.,வில் மோடி ஆற்றிய கட்சிப்பணியின் பலன், 1998ல் குஜராத் மற்றம் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார். அதிலும் தன்னை நிரூபித்த மோடி, இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் பா.ஜ., பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஒருவருக்கு ஐந்து மாநிலப் பொறுப்புகள் வழங்கி அழகுபடுத்தியிருக்கிறார்கள் என்றால், அவரது அன்றைய உழைப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்!

திரும்பி பார்த்த இந்தியா!

1998ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப் பேற்றதும், பா.ஜ.,வின் தேசிய செயலாளராக மோடி அறிவிக்கப்பட்டார். 2001 அக்.,6ல் குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் ராஜினாமா செய்ய, பா.ஜ.,வில் தனிப்பெரும்பான்மையுடன் அக்.,7ல் குஜராத் முதல்வராக மோடிபதவியேற்றார். அதுவரை இந்தியாவின் பிற மாநிலங்களை போலவே வரைபடத்தில் சுட்டிக்காட்டும் பகுதியாக தான் குஜராத் இருந்தது. அந்தபாலைவனப்பகுதி, அதன் பிறகு தான் சோலைவனமாக மாறத்தொடங்கியது.

விமர்சனங்கள் விரட்டியடிப்பு!

2002 பிப்.,27ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மோடி, அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தரப்பினர் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி, தன் மீதான விமர்சனங்களை விரட்டினார்.தன் நல்லாட்சியால் பிற மாநிலங்களை மிரட்டினார்.அதன் பின் குஜராத்தில் நடந்த 2007, 2012 சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.,வே ஆட்சியை தக்கவைத்து, தொடர்ந்து நான்காவது முறையாக மோடியே முதல்வராக மகுடம் சூட்டினார். தொடர்ந்து 2,063 நாட்கள் ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றவர் என்ற பெருமை, மோடியை மட்டுமே சேரும். குஜராத்தில் அவருக்கு இருந்த அமோக ஆதரவை அறியாமல், அவர் மீது ஒவ்வொரு முறை விமர்சனங்களை பாய்ச்சி, அதில் படுதோல்வி அடைந்தவர்கள் ஏராளம்.தன் மீதான விமர்சனங்களையோ, விமர்ச்சித்தவர்களையோ சிந்தித்து நேரத்தை வீணடிக்காமல், மாநிலத்தின் வளர்ச்சியிலும், தன்னை ஆட்சி பீடத்தில் அமரவைத்து அழகுபார்த்த மக்களின் நலனிலும் தான் மோடி அக்கறை காட்டினார். அதனால் தான் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை குஜராத் அடைய முடிந்தது.

தனக்கென தனி பாணி

”சிறந்த ஆட்சி என்பது காகிதங்களை தாண்டி, வாழ்க்கையை பார்க்க கூடியது என்பதால், மக்கள் பிரச்னைகளை அரசு அலுவலக கோப்புகளில் தேடாமல் வாழ்க்கையில் தேடினேன். உயர்ந்த கட்டடங்களிலும், குளிரூட்டப்பட்ட அரங்குகளிலும் இருந்து பார்த்தால் கிராமங்களின் பிரச்னைகள் கண்ணுக்கு தெரியாது,” என, 2010ல் ஆற்றிய உரையில் மோடி கூறியிருந்தார். இது தான் மோடியின் வெற்றி ரகசியம்.

சுத்தமான ‘அரசு’ வாழ்க்கை:

அரசியல் வாழ்க்கையில் மட்டுமின்றி, தன் ‘அரசு’ வாழ்க்கையிலும் மோடி ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறார்.— தன் ஆசாபாசங்களிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் விலகிதனக்கு வாய்ப்பளித்த மக்களை மட்டுமே சதாகாலமும் மனதில் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மோடியின் வீட்டில், பிற அரசியல் தலைவர்களின் வீட்டில் இருப்பதைப் போன்று படை, பட்டாளங்களை காண முடியாது.தன் வீட்டில் குறிப்பிட்ட சிலரை தவிர பிறரை அவர் அனுமதிக்க வில்லை. தன் அரசு பங்களாவில், ஒரு சமையல்காரர், இரு உதவியாளர்கள் தான் மோடியுடன் வசிப்பவர்கள். சமையல்காரர் விடுமுறை என்றால், உதவியாளரில் ஒருவர் தான் அன்றைய சமையல்காரர். இப்படியும் ஒரு முதல்வரின் வீட்டை எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
துளியும் இல்லை

துஷ்பிரயோகம்

ஒரு துறையில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து, தன் குடும்பத்தினர், உறவினர்களை உள்ளே இழுக்கும் ‘வாரிசு’ கலாசாரத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரான மோடி எவ்வளவு வித்தியாசப்படுகிறார்? தன் 95 வயது தாயை கூட தன் ‘அரசு’ வாழ்க்கையின் அருகே வைத்துக்கொள்ளாமல், தன் மூத்த சகோதரரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். ‘என் தம்பி தான் முதல்வர்’ என, அவரது சகோதரர்கள் அரசு வாகனங்களில் வலம் வருவதில்லை. ‘நான் சொல்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங் கள்…’ என, மோடியின் உறவினர்கள் யாரும் சிபாரிசுக்கு வந்து நிற்பதில்லை.அதை விட ஆச்சரியம், மோடியின் மூத்த சகோதரரர் சுகாதாரத் துறையிலும், இரண்டாவது சகோதரர் நகரின் எங்கோ ஓர் மூலையில் கடை வைத்திருக்கிறார். மூன்றாவது சகோதரர் அரசுப்பணியில் குமாஸ்தாவாக உள்ளார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு இவர் தான் மோடியின் சகோதரர் என்பதே பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரிந்ததாம். இப்படி தன்னாலும், தன் குடும்பத்தினராலும் அரசு அதிகாரத்தில் துஷ்பிரயோகம் நடைபெறாத படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் மோடி. அவரது தாய் இன்னும் ஆட்டோவில் தான் ஆமதாபாத்தில் வலம் வருகிறார்.

ஓய்வில்லா உழைப்பு

அறுபத்து நான்கு வயதான மோடியின் உழைப்பை, அவரது பிரசாரத்திலேயே அறிய முடிந்தது. காலை 4.30 மணிக்கு எழுந்து, அடுத்த ஒரு மணி நேரம் யோகா, அதன் பின் இமெயில்கள் கவனிக்க சில மணி நேரம், குறிப்பாக கூகுள் அலர்ட்டுகளை கவனிப்பது மோடியின் வழக்கம்.அடுத்தது நாளிதழ்களை வரிவிடாமல் படித்துவிட்டு, காலை 7.30 மணிக்கெல்லாம் தன் முதல்வர் அலுவலக பணிகளை தொடங்கிவிடுவார். முதல்வர் இவ்வளவு வேகமாக இருக்கும் போது, அலுவலர்கள் எப்படி சோம்பேறியாக இருக்க முடியும்? சுற்றிச் சுழன்ற குஜராத் அரசின் வளர்ச்சி இயந்திரத்தில், மோடி தான் சக்கரமாய் இருந்தார்.

சுயநலமற்ற உழைப்பு

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் கி.மீ., துாரங்களை கடந்து, 430 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.தான் பிரதமர் வேட்பாளர் என்பதற்காக மட்டும் மோடி தன் உழைப்பை தரவில்லை. ஒருவேளை வேறு நபரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, தேர்தலுக்கான பொறுப்பாளராக அவரை நியமித்திருந்தாலும் இதே உழைப்பை தான் மோடி அளித்திருப்பார் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் கருத்து.

‘சக்சஸ்’ தொடரும்

அபார நினைவாற்றல், யாரிடம் எந்த வேலையை தர வேண்டும் என்பதில் உறுதி, ஒரு பிரச்னையின் முழு பரிமாணத்தை தெரிந்து கொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார், ஒரு பிரச்னையை நன்கு புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும் என்பதில் உறுதியாக இருப்பவர், தற்காலிக தீர்வை விரும்பாதவர், ஒரு முறை எடுக்கும் முடிவை நிறைவேற்றும் வரை பின் வாங்கமாட்டார், பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்ததும் ஒதுங்கிவிடாமல், அதை பின்தொடர்வார், பிறர் யோசனைகளை செவி கொடுத்து கேட்கும் குணம் கொண்டவர், தான் இட்ட பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றவில்லை என்றால் பொறுமை இழந்துவிடாதவர் என்பது எல்லாம் மோடியின் தனிப்பட்ட குணங்கள்.

‘டீ மாஸ்டர் டூ பிரைம் மினிஸ்டர்’

சாதாரண டீகடை நடத்தி வந்த மோடி, குஜராத்தின் முதல்வராகி இந்தியாவின் அடுத்த பிரதமராகிறார். அவரது வாழ்க்கைவரலாற்றை, அமெரிக்காவில் வாழும் குஜராத்தைசேர்ந்த ஒரு தொழிலதிபர் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியாக விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படத்திற்கு ‘டீ மாஸ்டர் டூ பிரைம் மினிஸ்டர்’ என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப காதலர்

இளைஞர்களை இணையத்தில் கவர்வதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் மோடி. பேஸ்புக், டுவிட்டர், கூகுள் இவற்றில் தனக்கென ஒரு பக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். பணிகளின் நெருக்கடியிலும் அடிக்கடி புதிய செய்திகளை பதியவிடுகிறார். ஊடகத்தை சந்திப்பதையும் தவிர்ப்பது இல்லை. இதனால் அரசின் ஒவ்வொரு நற்செயலும் மக்களுக்கு சென்றடைகிறது. விமர்சனங்களுக்கான பதில்களும் அளித்து வருகிறார். தேர்தலில் கூட ஐரோப்பாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 ஜி தொழில் நுட்பத்தால், ஒரே நேரத்தில் பல நகரங்களின் மேடைகளில் பேசி புதுமையான பிரசாரத்தை தொடர்ந்தார். புதுமையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதிலும், வரவேற்பதிலும் ஒரு இளைஞரை போல் செயல்படுகிறார், இந்த தொழில் நுட்ப காதலர்.

நரேந்திர மோடி டாட் இன்

தகவல் தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் மோடி, மக்களுக்காக ‘நரேந்திர மோடி டாட் இன்’ என்ற, இணையதளத்தை நடத்துகிறார். இதில் ‘மக்கள்இதழியல்’ என்ற பிரிவில் பொதுமக்கள் சமூக நிகழ்வுகளை எழுதலாம். அவை, புதிய சிந்தனை, பொது பிரச்னை, நாட்டு நலன் குறித்துஇருக்கலாம். விபரமாக எழுத விரும்பினால் போட்டோவுடன்
கட்டுரையாகவும் பதியலாம்.

மின்ஒளி கொடுத்த ஜோதிக்ராம்

மோடியின் ‘ஜோதிக்ராம்’ திட்டத்தில் குஜராத் மின் ஒளியில் மின்னுகிறது. 18742 கிராமங்களில், 9680 நகர் பகுதிகளில் அனைத்து வீடுகளும் 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மோடி எடுத்து கொண்ட கால அளவு ஒரு மாதம் மட்டுமே. 2012ல் குஜராத்தின் மின் உற்பத்தி 21000 மெகா வாட் இருந்தது. அதில் 600 மெகா வாட் உபரி மின்சாரம் 220 தமிழகத்திற்கும், 200கர்நாடகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

குறை ஒன்றும் இல்லை

குஜராத்தில் பொதுமக்களுக்கும், முதல்வருக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்துகிறது ‘ஸ்வாகத்’ திட்டம். காந்திநகரில் ஒவ்வொரு மாதத்திலும் 4வது வியாழக்கிழமையும் ஸ்வாகத் நாள். மக்களிடம் ஆன்லைனில் பெறப்பட்ட புகார் மனுக்கள்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதிகாரிகள் 4 மணி நேரத்திற்குள் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை முதல்வர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கண்கானிப்பார். நியாயமான மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு வழங்ப்படும். இதுவரை எந்த ஒரு மனுதாரரும் உறுதியான பதில் இல்லாமல் திரும்பி சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE