மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து! இளைஞன் பலி

243

accsi.Crash-Generic2-300x225

யாழ்.காரைநகர் வலந்தலை சந்தி பகுதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியு விபத்துக்குள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் சங்கானை பகுதியைச் சேர்ந்த எஸ்.ரவிகரன்( வயது21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பேருந்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார் என அறியமுடிகின்றது.

SHARE