மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!- ஒருவர் காயம்

311

உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தங்கொட்டுவை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தங்கொட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நின்ற பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும் அந்த வாகனத்தை நிறுத்தாமையினால் ஒரு அதிகாரி குறித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் இதுவரையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த மேலும் ஒருவர் மற்றும் வானத்தையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மோட்டார் வாகனத்தில் இருந்து கஞ்சா மற்றும் சட்ட விரோதான மதுபானங்கள் அடங்கிய 7 பைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE