மோதல்கள் ஏற்படலாம், பொது மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

227

625.256.560.350.160.300.053.800.461.160.90

பல்வேறு அரசியல் கட்சிகளினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனிகள் மற்றும் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் என்பனவற்றின் போது மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கலவரம் ஏற்படும் விதமான செயற்படும் சகலருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளார்.

கண்டியிலிருந்து ஆரம்பிக்கவுள்ள நடைபவனி மற்றும் வேறு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் என்பனவற்றினால் மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனால், பொது மக்கள் கூடிய அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோதல்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதயாத்திரையின் போது எந்த மோதல்களும் இடம்பெறக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களால் நேற்றிரவு இடம் பெற்ற ஒன்று கூடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த பாதயாத்திரையின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களாலும் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோதல்கள் குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

SHARE