மோதவிருந்த விமானங்கள்..! 439 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி கமெராவில் பதிவான பரபரப்பு காட்சி

231

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

சீனாவில் விமானி ஒருவர் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டு நிகழவிருந்த பயங்கர விபத்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டு தவிர்த்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

ஹி சாவோ என்ற விமானியே விபத்தை தவிர்த்து 439 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

ஹி சாவோவை கௌரவிக்கும் வகையில் சீனா விமான நிறுவனம் 3 மில்லியன் யுவான் (2 கோடியே 96 லட்சம்) பரிசாக அளித்துள்ளது.

கடந்த மாதம் ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து 147 பயணிகளுடன் தியான்ஜின் செல்லும் A320 விமானத்தை ஹி சாவோ விமானி இயக்கியுள்ளார்.

A320 விமானம் ஓடு பாதையில் புறப்பட வேகமாக பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் பயணித்த விமான் ஓடு பாதை குறுக்கே தரையிறங்கியுள்ளது.

இதைக் கண்ட ஹி சாவோ பயங்கர விபத்தை தவிர்க்க A320 விமானத்தை முன்னதாகவே டேக் ஆப் செய்துள்ளார்.

இதன் மூலம் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டு நிகழவிருந்த மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இரண்டு விமானங்களிலும் மொத்தம் 413 பயணிகள், 27 விமான குழுவினர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தக்க சமயத்தில் புத்திசாலிதனமாக செயல்பட்ட ஹி சாவோவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE