யானைகளின் அட்டகாசம் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாFk; ரிதிதென்னை மீள்குடியேற்ற கிராம மக்கள்.

128

யானைகளின் அட்டகாசம் காரணமாக தாம் பாதிப்பிற்கு உள்ளாவதாக ரிதிதென்னை மீள்குடியேற்ற கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – வெலிக்கந்தை எல்லையிலுள்ள, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே ரிதிதென்னை கிராமம் காணப்படுகிறது. குறித்த கிராம மக்கள் அடிக்கடி யானைகளால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ரிதென்னை பாலர் பாடசாலை வீதியில் வசிக்கும் ஐந்து பேரின் வீட்டுத் தோட்டங்களுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த இரு யானைகள் பயிர்கள் அனைத்தையும் சேதமாக்கியுள்ளன.

இதன்போது 70 தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி, வாழை, பப்பாசி போன்ற தாவரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வெலிக்கந்தை, அசேலபுரம் குளத்தின் வழியாக வந்த இரண்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்த முயற்சித்த போது அப்பகுதி மக்கள் துரத்த முயற்சித்தனர்.

இந்த நிலையில் அவர்களை அடிப்பதற்கு யானை துரத்தியிருந்தன. யானை வேலி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம்.

இருப்பினும் இது வரையில் எவ்வித நவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

SHARE