யானைகள் குப்பைகளை உண்ணும் அவலம்

74

 

கந்தளாய், சூரிய புர 9 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் சூரிய புற 9 ஆம் கட்டை பகுதியில் கொட்டபடுகின்ற நிலையில் அதனை அவதானித்து வைத்துள்ள யானைகள் அவ்வாறு குப்பைகளிலுள்ள உணவுகளை உட்கொள்கின்றன.

சுமார் 20 யானைகள் கூட்டமாக இப்பகுதியில் வசிப்பதாகவும் இந்த யானைகள் தினந்தோறும் இவ்வாறு வந்து குப்பைகளை உண்டு விட்டு மீண்டும் காட்டிற்குள் சென்றுவிடுவதாகவும் அப்பகுதி மக்கள்  தெரிவித்தார்கள்.

SHARE