இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த திலான் பத்திரகே என்ற 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில், எதிர் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் வாகனத்துடன் இந்த இளைஞன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இளைஞனின் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.