யானையின் உடலை எரியூட்டிய சந்தேகநபர் விளக்கமறியலில்

297
காட்டு யானையொன்றின் உடலை எரியூட்டிக் கொண்டிருந்த சந்தேகநபரை மன்னார் மடு வனஇலகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வீட்டு வளாகத்திற்குள் மிருகங்கள் பிரவேசிக்காத வண்ணம் சந்தேகநபரினால் அதிவலு கொண்ட மின்கம்பி பொருத்தப்பட்டிருந்ததாகவும், அந்த மின்கம்பியில் சிக்குண்டே இந்த காட்டு யானை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சந்தேகநபர் குறித்த யானையின் உடலை டயர்களை கொண்டு எரியூட்டியுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SHARE