2009ல் இருந்து ஈழத்தில் நடந்து வரும் அரசியல் போராட்டங்களை கவனித்து வரும் எல்லா அரசியல் அவதானிகளுக்கும் ஆனந்தி சசிதரனின் போராட்ட குணம் தெரிந்திருக்கும்… அடிப்படை அரசியல் விளக்கம் உள்ளவர்களுக்கு ஆனந்தி சசிதரன் யார் என்பதை நாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை… ஆனால் ஐயா கலைஞரின் அடிமைகள் சிலருக்கு அவரை பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவர்களுக்கு 2009இல் என்ன நடந்ததென்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை… ஆகையினால் தான் இந்த அடிமைகளின் கண்காணி கலைஞர் போன மாதம் 18ஆம் திகதி அன்று ஏதோ ஒரு முத்தமிழ் விழாவில் நடன நிகழ்சிகளை கண்டு களித்து கொண்டிருந்தார்.. …

ஒரு முதல் அமைச்சரின் மூன்றாவது மனைவிக்கு பிறந்து, ஊர் பணத்தை கொள்ளை அடித்து பொழப்பு நடத்தும் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதி இல்லை… மகிந்த ராஜபக்சவின் அடக்குமறை ஆட்சியிலேயே தனது கணவரையும் மற்ற காணாமல் போன மக்களையும் மீட்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்…
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல நீதிமன்றம் ஏறிய ஒரு ஊழல்வாதி அல்ல….தினசரி பல உலக மன்றகளுக்கு சென்று இனப்படுகொலையை பற்றிய செய்திகளை உலகுக்கே உரக்க சொல்லி வரும் ஒரு சாட்சியம்
ஊர் பணத்தை கொள்ளை அடித்து அப்பன் கட்டிய மாளிகையில் வளர்ந்த கிளி அல்ல…
அவர் ஒரு போராளியை மணந்து, கணவருடன் தேசத்தின் விடுதலைக்காக பங்கர்களிலும், காடுகளிலும் வாழ்ந்த ஒரு புலி…
அவர் அரசியல் ஆதாயத்திற்காக, அன்றொன்றும் இன்றொன்றும் பேசிவரும் ஒரு திராவிட கட்சி தலைவர் அல்ல…
தான் கொண்ட நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறாது, வலுவற்ற எமது மக்களுக்காக பேசும் ஒரு முகவர்.
அவர் திடீர் திடீர் என்று தேர்தல் நேரத்தில் அறிக்கைகள் விடும் சந்தர்ப்பவாதி அல்ல… போர் முடிந்த காலத்தில் இருந்து இந்த குற்றச்சாட்டுகளை அனைத்து மேடைகளிலும் பதிவு செய்து வரும் அப்பழுக்கற்ற நேர்மைவாதி..
கலைஞரின் பிரதான அடிமைகள் சிலர், ஆனந்தி சசிதரின் இப்போது இந்த குற்றச்சாட்டை வைக்க காரணம் என்ன? இதன் பின்னணியில் அவர் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் என்றெல்லாம் பிதற்றி கொண்டு அலைகிறார்கள் … அவ்வப்போது செய்திகளை படித்திருந்தால் இந்த அடிமைகளுக்கு அவர் இந்த கருத்தை பல வருடங்களாக சொல்லி வருகிற விஷயம் தெரிந்திருக்கும்…. பாவம் மானாட மயிலாட பார்க்கும் பிஸியில் இருப்பவர்களுக்கு இந்த செய்திகளை படிக்க எங்கே நேரம் ?
வடக்கு மாகான சபை தேர்தலில், முதல் அமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்கு பெற்ற வேட்ப்பாளராக இருந்தாலும் , மக்களுக்கு கொடுத்த வாக்குரிதிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது கட்சி தலைமைகளையே பல சந்தர்ப்பங்களில் பகைத்து கொண்டு வாழும் ஒரு அரசியல் போராளி ஆனந்தி அக்கா இவர்களுக்கு
நேர்மையற்றவராம், தி.மு.க- காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களின் முக்கிய பங்குதாரர் கனிமொழி இவர்களுக்கு சத்தியத்தின் சிகரமாம்… எல்லாம் காலக் கொடுமை.
ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில் புலிகளை சரணடைய வைத்ததில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பங்கு என்ன? இன்னும் யார் யார் இதன் பின்னணியில் இருந்தார்கள்?
என புலித்தலைவர் ஒருவரின் மனைவியே கேள்விக் கணைகளை வீசியிருக்கிறார்.
அந்தப் பெண்மணியின் பெயர் அனந்தி சசிதரன். விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் இவர். ஜூன் 7ம் திகதி கொழும்பில் உள்ள தமிழ் நிருபர்கள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் அனந்தி.
அப்போது இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த 2009 மே 16ம் திகதி இரவு 8 மணிக்கு கருணாநிதியின் பெண் வாரிசு ஒருவரிடம் எனது கணவர் சசிதரன், சட்டிலைட் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த பெண் வாரிசு நீங்கள் சரண் அடைந்திடுங்கள், உங்கள் விடுதலைக்கு நாங்கள் உத்தரவாதம் தருகின்றோம், சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது எனக் கூறினார்.
அதை நம்பியே எனது கணவரும் நூற்றுக்கணக்கான புலித் தோழர்களும் மே 18ம் திகதி காலை எட்டரை மணிக்கு பாதிரியார் ஒருவரது முன்னிலையில் சிங்கள அரசிடம் சரணடைந்தார்கள். அதன் பின்னரே பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியானது.
அதன் பின்னர் இன்று வரை எனது கணவரும் அவரோடு சரண் அடைந்த தோழர்களில் பலரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இறுதிக்கட்டத்தில் இப்படி சரணடையும்படி கருணாநிதியின் வாரிசு ஏன் சொன்னார்? இதன் பின்னணியில் யார் யார் இருகின்றார்கள்? இதையெல்லாம் இப்போதாவது கருணாநிதி வெளிப்படையாகப் பேசவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் அனந்தி.
ஈழ இறுதிப்போரில் கருணாநிதி துரோகம் செய்ததாக இவ்வளவு நாளும் வைகோவும் சீமானும் இன்னும் பிற தமிழகத் தலைவர்களும் மட்டுமே கூறி வந்தனர்.
முதன் முறையாக ஈழத்தில் இருந்து இப்படியொரு குரல் கிளம்பியிருப்பது உலகம் முழுக்க தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது.
இந்த விவகாரத்தைக் கிளப்பியிருக்கும் அனந்தி ஒருபோதும் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் இல்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சுழிபுரம் இவரது ஊர். அங்குள்ள பிரசித்திபெற்ற விக்டோரியா கல்லூரியில் அக்கவுன்டன்சி பிரிவில் பட்டம் பெற்றவர் இவர்.
விடுதலைப் புலிகளின் ஆளுகையின்போது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நிர்வாக உதவியாளராக அனந்தி பணிபுரிந்தார். 1998இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வவுனியா பகுதி அரசியல் பிரிவு தலைவராக இருந்த சசிதரனை (இயக்கப் பெயர் எழிலன்) இவர் மணந்தார்.
அனந்தியின் சகோதரி வசந்தி. மற்றொரு போராளி இயக்கமான EPRLF இல் இணைந்து பணி செய்தார். போராளி இயக்கங்கள் இடையிலான சகோதரச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல் உண்டு. அனந்தியின் இளைய சகோதரர் ஒருவரும் புலிகள் இயக்கத்தில் இணைந்து காணாமல் போனவர்தான்.
ஈழ இறுதிப் போரின்போது அனந்தியின் கணவரான சசிதரன் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை பகுதி அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார். பிரபாகரன் மரணம் அடைந்த நாளாகச் சொல்லப்படும் 2009 மே 18ம் திகதிதான் சசிதரன் சரணடைந்தார். இன்னமும் எனது கணவரையும் சக தோழர்களையும் சிங்களப் படையினர் எங்காவது அடைத்து வைத்திருக்கலாம் என்றே கூறி வருகிறார் அனந்தி.
2009 இறுதிப் போருக்குப் பின்னர் தனது கணவர் உள்ளிட்ட காணாமல் போன தமிழ்ப் போராளிகளை மீட்கும் முயற்சியில் இறங்கினார் அனந்தி.
இதற்காக ஐ.நா. மனித உரிமைப் பிரிவு தலைவராக இருந்த நவநீதம்பிள்ளையிடம் ஒருமுறை நேரிலேயே சந்தித்துப் பேசினார். இலங்கை நீதிமன்றத்தில் இதற்காக ஆட்கொணர்வு மனுக்களையும் தாக்கல் செய்திருக்கிறார். அதிலும் கருணாநிதியின் பெண் வாரிசு பேசிய சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
2013ம் ஆண்டு வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு ஜெயித்தார் இவர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சிங்கள வெறியர்கள் இவர்மீது குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
அனந்தி கிளப்பியிருக்கும் விவகாரம் தொடர்பாக, ஊடகத்திடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வியனரசு, எழிலன் மட்டுமல்ல, புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான நடேசன் உட்பட பலரும் தமிழகத்தில் இருந்து தங்களுக்கு வந்த அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் வெள்ளை கொடியேந்தியபடி சரண் அடைந்தார்கள்.
என்ன நோக்கத்தில் இவர்கள் சரண் அடைய வைத்தார்கள்? இவர்களுக்கு அந்தப் பணியை கொடுத்தது யார்? அதன் பின்னணி என்ன? என அனந்தி எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கேள்விகளை நானும் எழுப்பி தனது கடைசிக் காலத்திலாவது கருணாநிதி உண்மையைப் பேச வேண்டும். இல்லாவிட்டால் இவை வெளிவராமலேயே போய்விடும் என கேட்டிருந்தேன்.
“சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையா ளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம் அற்றதொன்றா கும்.
இனிமேல், நானும் சும்மா இருக்க ப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவி த்துள்ளார்.
தமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரனை நீக்குவதாக கட்சியின் மையச் செயற்குழு முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக, அவரிடம் தொடர்பு கொண்டு வினாவிய போதே இவ்வாறு விவரித்தாா்.
அவர் மேலும் விவரிக்கையில்…..,
“ஆரம்பத்தில் இருந்தே தமிழரசுக்கட்சி என் மீது தாக்குதல் மேற்கொண்டு ள்ளது. அதனை நான் தான் புரிந்து கொள்ளவில்லை, என் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதல் மற்றும் என் மீதான அச்சுறுத்தல் என அனைத்தை யுமே தமிழரசுக்கட்சி தான் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இவ்வாறு இருந்து கொண்டு, இதர கட்சியினரை குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும்.
இனிமேல் என்னால் அரசியலில் இருந்து விலகி, சாதாரண ஒரு வாழ்க்கை யைத் தொடரமுடியாது. காரணம் பின்புலத்தில் எனக்கு பாதுகாப்பு பிரச்சினை என்பது பாரதூரமானதாக உள்ளது. இதை நன்கு அறிந்துள்ள கட்சி இவ்வாறு என்மீது தாக்குதல் மேற்கொள்ள முனைவது ஜனநாயகம் அற்றது. நான் உயிருக்கு பயப்படுபவர் அல்ல. நானும் திருப்பி அடிப்பேன்.
நான் அரசியலை வடிவாக படித்துவிட்டேன். கட்சி என் மீது மேற்கொண்ட குற்றங்கள், தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவேன். 2015 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போ தைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எந்த ஒரு முடிவும் கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
அக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கல ந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அது தொடர்பான நடவடிக்கையாகவே என்னை கட்சியிலிருந்து விலக்குதல் என்பது, எந்த விதத்தில் நியாயம், இதனை விட இந்த விவகாரம் தொடர்பில் என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை யும் எடுக்கப்பட்டுள்ளது.
என்மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என கட்சி அறிவித்தது. இதன்படி என்னை விசாரணை க்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது நான் வட க்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தேன். கொழும்பு செல்வதுக்கான வாகன வசதியும் இல்லை.
அத்தோடு பாதுகாப்பு பிரச்சினையும் இருந்தது. இதனை விசாரணை குழுவில் அங்கம் வகித்த சட்டத்தரணி தவராஜாவிடம் தொலைபேசி மூலம் தெரி வித்தேன். அதனை அவர் எழுத்தில் கோரிய நிலையில், எனது தரப்பு முழு விட யத்தையும் நான் எழுத்து மூலம் வழங்கியிருந்தேன்.
விசாரணை முடிவில் நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் இருக்கலாம் எனவும் கட்சியின் மகளீர் விவகார செயலாளராக பதவி வகிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது முதல் 5 வருடங்கள் என கூறப்பட்டு பின்பு 3 வருடங்களுக்கு என கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழ ங்கப்பட்டது.
தற்போது கட்சியில் இருந்து நிறுத்துவது என்ன, என்பது எனக்கு புரியவில்லை. கட்சி என் மீது திட்டமிட்டே இவற்றை செய்கிறது. இது தொடர்பாக எனக்கு எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் கட்சியினால் கிடைக்க வில்லை.
நானும் இவ்விடயத்தை பத்திரிகை செய்தி வழியாகவே அறிந்து கொண்டேன். இச்செய்தி தொடர்பான முழுமையான எனது விளக்கத்தை அறிக்கை வடிவில் விரைவில் வெளிப்படுத்துவேன்”
தொடரும்……..