யார் இந்த ஆரவ், வெளிவந்த உண்மை தகவல்கள்

180

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மிகவும் பேமஸ் ஆரவ். இவர் சைத்தான் படத்தில் கூட ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார், இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் ஆரவ், சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், இவர்கள் குடும்பம் பல ஆண்டுகளாக திருச்சியில் தான் வசித்து வந்துள்ளது.

ஆரவ் பள்ளி படிப்பை எல்லாம் திருச்சியில் தான் முடித்துள்ளார், கல்லூரிக்காக சென்னை வந்த இவர், அப்படியே மாடலிங் துறைக்கு வந்துள்ளார்.

அங்கிருந்து சைத்தான் பட வாய்ப்பு கிடைக்க, அப்படியே பிக்பாஸ் பக்கமும் எட்டிப்பார்த்துள்ளார். இவருக்கும் ஓவியாவிற்கும் காதல் என்பது போல் தொலைக்காட்சி சித்திரித்து வருகின்றது.

ஆனால், ஆரவ் வீட்டினார் ‘அவன் ரொம்ப நல்ல பையன், காதல் எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை’ என்று கூறுகின்றனர்.

SHARE