
* அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்பவனாக திகழ்ந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி உள்ளார்.
* ரின் முழுப்பெயர் டொனால்டு ஜான் டிரம்ப், 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயதாகிறது.
* ட் டிரம்ப், மேரி மெக்லியோட் டிரம்ப் தம்பதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவர் டொனால்டு டிரம்ப்.
* பதின்ம வயது டிரம்ப்புக்கும் தந்தைக்கும் ஒத்துவராததால், நியூயார்க்கின் ராணுவக் கல்விக் கழகத்தில் சேர்க்கப்பட்டார்.
* பாதத்தில் “Heel Spurs” எனும் எலும்பு தூக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினை இருந்ததால், வியட்நாம் போரில் பங்கேற்பதிலிருந்து டிரம்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
* நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பை 1968ம் ஆண்டு படித்து முடித்தார்.
* 1968ஆம் ஆண்டு தந்தை கொடுத்த ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு தொழில் தொடங்கினார் டிரம்ப்.
* டிரம்புக்கு மூன்று திருமணங்கள், ஐந்து பிள்ளைகள். பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம் என பல முகங்கள்
* நியூயார்க்கில் உள்ள 17 கட்டடங்களில் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை அல்ல.
* இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலராகும்.
* ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டி பறந்த டிரம்ப், தொலைக்காட்சிகளிலும் பிரபலமானவராக திகழ்ந்தார்.
* 1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றாலும் 1999ம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார்.
* பின்னர், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.
* 1987ம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக்கட்சியிலும், 1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து டிரம்ப் பணியாற்றியுள்ளார்.
* இதற்கிடையே 2012ம் ஆண்டு மீண்டு குடியரசுக் கட்சியில் இணைந்தார், தொடர்ந்து 2016ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக போட்டியிட்டவர், தற்போது அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாகி உள்ளார்.
* எந்தவித அரசியல் பதவிகளும் வகிக்காத டொனால்டு டிரம்ப், குறுகிய காலத்தில் குடியரசு கட்சியின் வேட்பாளராகி தேர்தலில் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
* 1946ம் ஆண்டு ஜுன் 14ம் தேதி நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிறந்தவர் டொனால்ட் டிரம்ப். அரசியல் வாசனை இன்றி வளர்க்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்