யால தேசிய வனத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு நிபந்தனைகள்

277
யால தேசிய வனத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய வனத்தில் உள்ள மிருகங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுமித் பிலபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த வாரம் பாடசாலை விடுமுறை என்பதால் அதிகமானோர் இங்கு வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சபாரி வாகனத்தின் சாரதிகள் சங்கத்தினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சபாரி வாகன உரிமையாளர்களும் இந்த நிபந்தனைக்குள் உள்வாங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நிபந்தனைகள் மற்றும் சட்ட திட்டங்களை மீறுவோர் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

---------------------------------------------300x200

SHARE