யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு வீடு வழங்கும் நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள்

221

அண்மையில் யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு, நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்.

சரத் ஹேமசந்திரவின் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கு மேலதிகமாக குடும்பத்தினருக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் வழங்கவும் நண்பர்கள் இணங்கியுள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியன் யாழ். சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில் அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லுார் பின் வீதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸ் சார்ஜன் சரத் ஹேமசந்திர உயிரிழந்ததுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் விமலசிறி காயமடைந்தார்.

SHARE