சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். சிறைச்சாலையிலிருந்து நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
நேற்றிரவு 07ஆம் விடுதியிலிருந்து தப்பியோடியுள்ளார். வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்ததையடுத்து பொலிஸார் அவரை தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை யாழ்.பொலிஸார் மற்றும் சிறைச்சாலைஉயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.