யாழில் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்டவர் பெண்னெருவரால் புகைப்படம் எடுத்து அடையாளம் காணப்பட்டார்

330

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கட்டப்பிராய் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் கைதுசெய்யபட்டுள்ளார்.

இவர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றி எவரும் இல்லாத தருணத்தில் மூடியிருந்த கதவை உடைத்து மோட்டார்சைக்கிளில் வந்த நபர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சோதனையிட்டுள்ளார்.

குறித்த வீட்டில் சந்தேகத்திற்கிடமானவர் நடமாடியதைத் தொடர்ந்து பிரதேச மக்கள் வீட்டை முற்றுகையிட்டனர்.

வீட்டிற்குள் நுழைந்த பெண் ஒருவர் திருட்டு சம்பவத்தில், ஈடுபட்ட நபர் புகைப்படத்தை தனது தொலைபேசியில் பதித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் உரும்பிராய் பகுதியிலுள்ள அவரது வீட்டில்வைத்து சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 55 ஆயிரம்ரூபாய் பணம் மீட்கப்பட்டதுடன், மேலதிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jaffna_kollai_001

jaffna_kollai_002

jaffna_kollai_003

jaffna_kollai_004

jaffna_kollai_005

jaffna_kollai_006

jaffna_kollai_007

jaffna_kollai_008

jaffna_kollai_009

SHARE