யாழ். புத்தூர் நவக்கிரிபகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்தபகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில் மக்களிடையே பதற்றநிலை காணப்பட்டது. சுpறிய வெடிப்புக்களாக இருந்த பகுதிகள் தற்போது விரிவடைந்து காணப்படுவதாக பொதுமக்களால் அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நேற்றையதினம் தேசிய கட்டடங்கள் ஆய்வு ஆராட்சி நிலைய குழுவினர் மற்றும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் சென்று அப்பகுதியில் ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.