யாழில் பலத்த பாதுகாப்பு! திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை –

311
யாழ்.குடாநாட்டின் நகர் பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர், சிவில் உடையணிந்த பொலிஸாரினால் மதுபான விற்பனை கண்காணிக்கப்படும்
எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

சந்தேகத்திற்கிடமாக நடமாடுபவர்கள், மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், தொடர்பாக மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கலாம். அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தினை அடுத்து யாழ்.நகரில் ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிவில் உடைகளிலும், சீருடைகளிலும் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆலயங்களுக்குச் செல்பவர்கள் தமது வீடுகளையும், தாங்கள் அணிந்து செல்லும் நகைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து அதிகமானவர்கள் உறவினர்களிடமும், வியாபாரம் மற்றும் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வருகைதந்துள்ளனர்.

இவர்களுடன் இணைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் வந்திருக்கலாம். எனவே பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான 5 குழுக்களாக பிரிக்கப்பட்ட பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

24 மணித்தியாலங்களும் இவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மக்கள் ஒன்று கூடும் பகுதிகள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை செய்யப்படுவதாக இனங்காணப்பட்ட பகுதிகள் அனைத்தும் பொலிஸாருடைய தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

SHARE