யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் இரு மாணவிகளே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.