யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைக்கவுள்ளார். அதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவே கருணாஸ் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, நடிகர் கருணாஸுடன் இணைந்து சட்டத்தரணி க.சுகாஷும் முதலமைச்சரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முதலமைச்சருடான சந்திப்பு நிறைவடைந்ததும் கருணாஸ் யாழ்ப்பாண செய்தியாளர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.