யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் இளம் பெண்ணுடன் சேஷ்டை விட்ட இளைஞர்ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படிச் சம்பவம் தொடர்பாகமேலும் தெரிய வருவதாவது.
குறித்த பகுதியால் தனது சகோதரியை தனியார் கல்விநிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாதமுறையில் நடக்கமுயன்றுள்ளார்.
இதனை குறித்த பெண் தன் தந்தைக்கு கூறிய நிலையில் தந்தைநியாயம் கேட்க சென்ற நிலையில் தந்தையை தாக்கிய குறித்த நபர் அங்கிருந்துதப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் குறித்தஇளைஞனை மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்ஒப்படைத்துள்ளனர்.
இந்த இளைஞன் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டுள்ளனர்.