யாழில் பெண் பொலிஸாருக்கு பற்றாக்குறை

283

 

யாழ். மாவட்டத்தில் போதிய பெண் பொலிஸார் நியமிக்கப்படாததால் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான விசாரணைகளின்போது ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மீள நியமிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் சடுதியான குறைவு காணப்படுகின்றது என்று யாழ். பிராந்தியத்துக்குரிய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தற்போது “ஏ’ தர பொலிஸ் நிலையில் இருந்து “சீ’ தர பொலிஸ் நிலையம் வரை ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரே கடமையாற்று கின்றார் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இரு வரும், இளவாலையில் இருவரும், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒருவரும், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒருவரும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒருவரும் கடமையாற்றுகின்றனர். யாழ். மாவட் டத்தில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங் களிலும் இதே நிலமையே உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் விடுமுறையில் சென்றால், மற்றையவரை அருகில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் தங்குமாறு பொலிஸ் மா அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் இரவு வேளைகளில் பெண்கள், சிறுவர் தொடர்பான விசாரணைகளை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது சில விடயங்களை கூறுவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் “சி’ தர பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கூட இங்குள்ள தலைமைப்பீட பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப் படவில்லை என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

ஆளணிப் பற்றாக்குறை குறித்து பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் எனினும் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களிலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 2இற்கும் குறைவாகவே உள்ளது.

அதேவேளை, கடந்த ஆண்டு பொலிஸ் கல் லூரியில் இருந்து வெளியேறிய 10 தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காலி, மாத் தறை பகுதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

SHARE