நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இளம் சுயேட்சை குழு ஒன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையினில் அக்குழு தம்மை வெளிப்படுத்த மறுத்துள்ளது. இக்குழுவின் முதன்மை வேட்பாளரான சுந்தரலிங்கம் சிவதர்சன் என்பவருக்கு 21 வயதாகும். அந்த சுயேட்சை குழுவில் தேர்தலில் போட்டியிடும் 10 பேரில் ஆறு பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன்
அவர்கள் அனைவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்களை சந்திப்பதை தவிர்த்து அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன் வெளியேறியுள்ளனர்.