யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து மூவர் படுகாயம்

223

யாழ். சிறுப்பிட்டி, பருத்தித்துறை பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு எதிரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 08.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ். புத்தூரிலிருந்து கோப்பாய் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மேற்படி பகுதியிலுள்ள வீதியில் காணப்படும் பெரு வளைவையும் பொருட்படுத்தாமல் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர்.

இதன்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடக்க முற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தாயாரை பலமாக மோதித்தள்ளியது.

சம்பவத்தில் வயோதிபத் தாயின் கால் முறிவடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞனும் படுகாயங்களுக்குள்ளானார்.

உடனடியாக இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைகளுக்காகக் கோப்பாய் அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் சிறு காயங்களுக்குள்ளானார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் வீதி வளைவையும் பொருட்படுத்தாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையே இந்த விபத்துக்கான காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE