மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 24 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து விட்டு இன்று அதிகாலை யாழ் நோக்கி சென்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.