யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

264
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என உறுதியளித்திருந்த போதும் இதுவரையில் தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமது பிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் அதனைத் தொடர்ந்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

வடமாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகள், தேசிய உயர் தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள், உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

SHARE