யாழைத் தொடர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதே கொழும்பு கொலைகள்..!! – திடுக்கிடும் உண்மைகள்!

203

sho

மட்டக்குளி – சமித்புற பகுதியில் அண்மையில் இடம்பெற்ற 7 பேர் மீதானதுப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் 3 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது குறித்த மரணங்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.மட்டக்குளி பிரதேசப்பகுதியில் இடம் பெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது எனவும் அதற்காக பின்புலத்தில் பொலிஸார் மற்றும் அரசியல் தரப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் பாதாள உலக குழுவை சேர்ந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இடம் பெற்றதாக பொலிஸார் அறிக்கைவிடுத்திருந்தனர்.

எனினும் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு மட்டுமே இந்தளவு பாரதூர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. என்ற நம்பகத்தகுந்த செய்தி பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் மூலமாக தற்போது வெளிவந்துள்ளது.

இதற்கான பின்னணி என்ன?

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் அந்த விடயத்தினை அடிப்படையாக கொண்டு பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இருவர் வெட்டப்பட்டனர் இந்த சம்பவம் யாழில் அமைதியை நிலைகுலைப்பதற்காகவே என்பது திட்டவட்டமாக புரிந்து விட்டது.

அதே சமயம் அந்த பதற்றம் தணியாத நிலையில் அடுத்ததாக கொழும்பில் துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளது. யாழில் ஏற்பட்ட சம்பவத்தினை இனவாதமாக சித்தரிக்க நடந்த முயற்சியே பொலிஸார் மீதான வாள் வெட்டுகள்.

அடுத்ததாக அதே போன்றதொரு சம்பவம் கொழும்பிலும் நிகழ்ந்தால் வெறும் ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாற்ற ஏதுவாக அமைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் அதனை பயன் படுத்த முயன்ற சில சதியாளர்களின் திட்டமே கொழும்பு கொலைகள் என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்குளி என்பது சிறுபான்மை மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசமாக இருப்பதால் இந்த நிலைமை மேலும் கூடுதல் கவனத்துடன் அவதானிக்கப்படவேண்டியதுகட்டாயம் என கூறப்படுகின்றது.

யாழில் ஏற்பட்ட மரணங்கள் முதலில் மறைக்க முயற்சி நடந்து பின்னர் அதுதோல்வியைத் தழுவியது. அதேபோன்ற முயற்சியே தற்போது கொழும்பில்இடம்பெற்றுள்ளது ஆனாலும் தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால்மறைக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு விட்டது.

இதேவேளை இதனை இருவகையில் நோக்க முடியும் ஒன்று யாழ்ப்பாணத்தைஅடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவமான இது பொலிஸாரினால் திசை திருப்பப்பட்டு விமர்சனங்களை தடுத்திருக்கலாம்.

அல்லது பதற்ற நிலையினை உருவாக்க பொலிஸாரின் உதவியுடன் இது அரங்கேற்றப்பட்டிருக்கலாம். ஆயுதப்பிரயோகங்கள் அவர்களை தாண்டிநடைபெறும் சாத்தியக் கூறுகள் குறைவு என்பதே இதற்கான காரணமாகும்.

எனினும் கூடிய விரைவில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என தென்னிலங்கைபுத்திஜூவிகள் தெரிவித்துள்ளனர். யாழ் கொழும்பு இரண்டு சம்பவங்களுக்கும் மிகுந்த தொடர்பு இருப்பதனை அவதானிக்க முடியும்.

யாழ் சம்பவத்தின் பின்னணியில் பொலிஸ் இராணுவத்தினரின் பங்களிப்பு அதிகம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது இவற்றினை தொகுத்து நோக்கும் போதுஇலங்கையில் பதற்றத்தினை ஏற்படுத்த ஒரு சில சக்திகள் முனைந்து வருகின்றதுஎன்பது தெளிவாகின்றது.

ஆனாலும் அரங்கேற்றப்பட்ட இந்த விடயங்களின் பின்னணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பங்களிப்பும் அதிகமாக காணப்படுகின்றது என்றேகூறப்படுகின்றது. அதற்கான காரணங்கள் இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் என்ற ஒன்று மட்டுமே.

கடந்த ஆட்சி மாற்றம் இடம் பெற்றதன் பின்னரே அதிகமாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருவதனை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது.

இதேவேளை யாழில் இடம் பெற்ற சம்பவங்களுக்கு பின்னணியில் மஹிந்த தரப்புஇருந்து செயற்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொழும்பில் இடம் பெற்ற சம்பவத்தில் பின்புலத்திலும் மஹிந்த தரப்பினர் இருக்கலாம் என்ற சந்தேகமும் வெளிப்படுத்தப்படுகின்றன.

மேலும் நாட்டில் இராணுவ புரட்சி மற்றும் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடியசாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கருத்துகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக்கால கட்டத்தில் இவ்வாறானசம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இவ்வாறான பதற்றங்கள் ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்த்து விடும் ஒன்றாகவே நோக்கப்படவேண்டும் அதற்கான திட்டங்களே இவை கூடிய விரைவில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அப்போதே அடுத்தடுத்து ஏற்படும் பதற்றங்களை தடுக்க முடியுமானதாக இருக்கும்.

அதன் பின்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விமர்சனங்கள் பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. அதற்கான காரணம் குறித்த சம்பவம் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு விட்டதனாலேயே ஆகும் உண்மைகள் கூடிய விரைவில் வெளிவரும்.

SHARE