யாழ்பாணத்தில் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது பொலிஸாரின் கடமை, இது இராணுவத்தினரின் கடமை அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய உயர் இராணுவ அதிகாரி ஒருவர்,
அடுத்த வருடம் ஜூன் இறுதிக்குள் புலம்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என கூறினார் என்றும் பாதுகாப்புப் படைத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இதன் போது குறிப்பிட்டுள்ளார்.