யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகைதந்து “போதையற்ற தேசம்” நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

265

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகைதந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பலாலிக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றுவரும் “போதையற்ற தேசம்” தேசிய வேலைத் திட்டத்தின் 8 ஆவது மாவட்ட நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.பொதுநூலகத்தின் அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-22

ஜனாதிபதி செயலகம், யாழ்.மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து நடத்தும் இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-21 625-0-560-320-500-400-197-800-1280-160-95-1 625-0-560-320-500-400-197-800-1280-160-95-2 625-0-560-320-500-400-197-800-1280-160-95-3 625-0-560-320-500-400-197-800-1280-160-95-4 625-0-560-320-500-400-197-800-1280-160-95-5

625-0-560-320-500-400-197-800-1280-160-95

இதனை தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி, யாழ்.பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE