யாழ்ப்பாணத்தில் அமைச்சர் அனந்திசசிதரன் ஒரு இரும்புப் பெண்மனி

140

 

புரட்சிகர பெண்கள் வரிசையில் தமிழ் இனத்தின் விடிவிற்காக குரல் கொடுக்கின்ற யாழ்ப்பாணத்தில் அமைச்சர் அனந்திசசிதரன் ஒரு இரும்புப் பெண்மனி  பூலான்தேவி, வீரலட்சிமி, அன்னைதிரேசா, கல்பனாசாகுல், நவநீதம் பிள்ளை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போன்றோர்கள் வரிசையில் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தமிழிழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற அமைச்சர் அனந்தி சசிதரன் தற்பொழுது ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஆரம்பித்துள்ளார். அரசியலில் ஆணாதிக்கம் தலைதூக்கியுள்ள நிலையில் தேசியம் சுயநிர்ணய உரிமையினை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவரது கட்சிக் கொள்கை விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

 

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம்

-சுருக்கமான கொள்கை விளக்க அறிக்கை

யாழ்ப்பாணம்

21-10-2018

ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்பு அல்லது கூட்டமைப்பின் கொள்கை செயற்பாடு

அல்லது நடைமுறை சரியாக முன்னெடுக்கப்படவில்லையாயின் அக்காரணங்களால்

முரண்பட்டுக் கொண்டிருக்கும் அங்கத்தவர்கள் அக்கட்சிக்குள் அல்லது கூட்டமைப்பிற்குள்

சீராக்க முடியவில்லை என்றால் அக்கட்சியில் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற

வேண்டிய நிலை ஏற்படும். அம்முரண்பாடுகளால் அக்கட்சியிலிருந்து அல்லது

கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் நிலை இருக்கும்போதும் அல்லது வெளியேற

வேண்டிய நிலை ஏற்படும் போது அவ்வாறு வெளியேறுபவர்கள் அல்லது

வெளியேற்றப்படுபவர்கள் இன்னொரு சிறந்த அமைப்பில் இணைவது அல்லது இன்னொரு

அமைப்பை கட்டுவது தவிர்க்க முடியாததாகிறது.

அந்தவகையில்தான் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகிய நானும்

எனது ஆதரவாளர்களும் இப்புதிய கட்சியை அமைத்து  இன்று

வெளியரங்கப்படுத்துகின்றோம்.

இக்கட்சியின் பெயர் ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனப்படும்.

திட்டமிட்டகுடியேற்றம் போன்ற பேரினவாத சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் வடக்கு கிழக்கில்

நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களின் மீதான பேரின மேலாதிக்க ஒடுக்கு

முறைகளை இல்லாதொழித்து அவர்களின் தேசிய அரசியல் அபிலாசைகளை உறுதி செய்யும்

வகையில் தங்களை தாங்களே ஆளும் மக்களின் இறைமையை அடிப்படையாகக் கொண்ட

சுயநிர்ணயத்துடன் கூடிய அதிகபட்ச சுயாட்சியை வென்றெடுப்பதே எமது பிரதான அரசியல்

இலக்கு.

அதிகபட்ச சுயாட்சி என்பதில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகள்

தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் பொதுவாகவும் பண்பாட்டு ரீதியில் குறிப்பாகவும் உறுதி

செய்வதாக இருக்க வேண்டும் அத்துடன் வடக்கு கிழக்கிற்கு வெளியில் மலையகத்தில் வாழும்

மலையகத்தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகளை உறுதி செய்வதற்கான நிகழ்ச்சி

நிரலையும் கொண்டே எமது கட்சி செயற்படும் இவ்வாறான அணுகுமுறைகளுடன்

செயற்பட்டாலேயே இன ஒடுக்கல்களை முற்றாக இல்லாதொழித்து சுயாட்சி சமத்துவம்

என்பவற்றின் அடிப்படையில் சுயவிருப்பில் இலங்கை வாழ் அனைத்து தேசிய

இனங்களிடையேயும் ஐக்கியத்தை கட்டி வளர்க்க முடியும்.

எமது நிலைப்பாட்டை ஏற்கும் அனைத்து சக்திகளுடனும் குறிப்பாக சிங்கள மக்கள்

மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகளுடனும் ஐக்கியப்பட்டு செயற்படுவோம்.

காலனித்துவ காலம்

காலனித்துவத்திலிருந்து இலங்கை நாட்டிற்கு வழங்கப்பட்ட சுதந்திர அந்தஸ்துடன்

ஈழத்தமிழர்களின் சுயாட்சி உரிமையை உறுதி செய்து கொள்வதற்கு காலனித்துவ காலத்து

 

2

அரசியல் சீர்திருத்தங்களோ  இலங்கை நாட்டின் சுதந்திரத்திற்கு வழி செய்த 1947 ஆம்

ஆண்டு சோல்பரி அரசியல் யாப்போ இடமளிக்கவில்லை, மாறாக சோல்பரியாப்பு

இலங்கையில் ஒற்றையாட்சியை உறுதி செய்தது.

பின்காலனித்துவ காலம்

சிங்கள தலைவர்கள் தமிழ் தேசிய இனத்துடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதை

ஏற்றுக்கொள்ளவில்லை 1948 பிரஜாஉரிமைச்சட்டம் 1956 ஆண்டு தனிச்சிங்கள சட்டம்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் போன்றன இன ஒடுக்கலை

தீவிரப்படுத்தின.

  1. தமிழ் தலைமைகள் வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒரு அலகாகக் கொண்ட சமஷ்டி

அல்லது கூட்டாட்சியை கோரிவந்த போதும் ஓரளவு அதிகாரத்தை பகிரும் நோக்கில்

1958 ஆண்டு பண்டாரநாயக்கவிற்கும் செல்வநாயகத்திற்குமிடையில் செய்து

கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பின்பு கிழித்தெரியப்பட்டது. பின்பு 1965 டட்லி

சேனநாயக்கவிற்கும் செல்வநாயகத்திற்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட

ஒப்பந்தமும் கைவிடப்பட்டது.

  1. தொடர்ச்சியாக சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து அஹிம்சை போராட்டங்களும்

நடத்தப்பட்டன. அவை ஒடுக்கப்பட்டதுடன் நடத்தப்பட்டன. அவை

ஒடுக்கப்பட்டதுடன் அக்கோரிக்கைக்கான பரப்புரையும் முறியடிக்கப்பட்டன.

  1. 1970-77 காலத்து ஆட்சியில் பல்கலைக்கழக மாணவர் தெரிவில் தரப்படுத்தல்

அறிமுகம் செய்யப்பட்டதால் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்

மாணவர்களின் தொகையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் யாழ்ப்பாண

மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே

தெரிவு செய்யப்பட்டனர். தமிழ்ப் பிரதேசங்கள் மேலும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

மேற்கொள்ளப்பட்டன. 1972 ஆண்டு அரசியல் யாப்பு சிங்கள பௌத்த

மேலாதிக்கத்தை நிறுவனமயப்படுத்தியது. இதனை எதிர்த்து கருத்து தெரிவித்த

ஜனநாயக போராட்டங்களை நடத்திய தமிழ் இளைஞர்கள் சிறைவைக்கப்படனர்

அவர்கள் பொலிஸ், இராணுவ அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1977

ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே. கட்சி அரசாங்கம் 1994 வரை தமிழ் மக்கள் மீது

திட்டமிட்ட  இன ஒடுக்கலை மேற்கொண்டது. இதனால் தமிழ் இளைஞர்கள் தங்களை

தற்காத்துக் கொள்வதற்காக தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றதுடன் ஆயுதங்களை

பாவிக்கத் தொடங்கினார்கள். அந்த ஆயுத பாவிப்பு பின்பு எதிர்ப்பு ஆயுத

நடவடிக்கைகளாக மாறியது. காலப்போக்கில் தமிழர்களுக்கு தனி நாடு அல்லது

தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயுதப்போராட்டம் பிரதான போராட்டவடிவமாக மாறியது.

4.இலங்கை இந்திய  சமாதான உடன்படிக்கை

தமிழ் அமைப்புக்களின் ஆயுத போராட்டங்களின் மத்தியில் இந்திய அரசின்

தலையீட்டினால் ஆயுதப் போராட்டங்களை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில்

1987 ஆண்டு இந்திய அரசிற்கும் இலங்கை அரசிற்குமிடையில் ஒப்பந்தம்

 

3

ஏற்படுத்தப்பட்டு குறைந்த பட்ச அதிகார கையளிப்புகளை கொண்ட மாகாணசபைகள்

அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை

அமைக்கப்பட்டது. சில மாதங்களின் பின்பு அது கலைக்கப்பட்டது.

இலங்கை இந்திய சமாதhன உடன்படிக்கை கையெழுத்திடும் போது தமிழீழ

விடுதலை புலிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மதித்து

நடக்கத்தவறியது என்ற அடிப்படையிலும் மாகாணசபைகள் தமிழ் மக்களின் தேசிய

அபிலாஷைகளை பூர்த்தி செய்ய ஏற்றதாக இராது என்ற அடிப்படையிலும் ஏனைய

இயக்கங்களை விட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மட்டும்

ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்தது. அதன் வளர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில்

கணிசமான நிலப்பரப்பை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

அக்காலகட்டத்தின் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் நோர்வே அணுசரனையில்

இலங்கை அரசிற்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடைக்கால சுயாட்சி நிர்வாகத்தை

ஏற்கும் அளவிற்கு முன்னேற்றம் காணப்பட்டது. பின்பு அப்பேச்சுவார்த்தையில் முறிவு

ஏற்பட்டது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பேச்சுவார்த்தைக்கு முனைப்பு

காட்டப்பட்ட போதும் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

  1. இராணுவரீதியாக விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடுக்கப்பட்டு 2009 மே

18 இலங்கையின் அரசின் போர் நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

காணாமலாக்கப்பட்டோர்  உயிரிழப்புகள்  சொத்தழிப்புகள் என பல அழிவுக்கு

உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச

அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும்

எதுவும் நகரவில்லை. போர் பூமியாக இன அழிவிற்கு உள்ளாக்கப்பட்டது போன்று

வடக்கு கிழக்கு போர்கால பீதிகள் தொடர்ந்தன.

  1. மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகி 2015 இல் ஜனநாதிபதி ஆனார்.

பின்பு அவரினதும் பிரதமர் ரணிலினதும் கூட்டு அரசாங்கம் பதவியேற்றது. தற்போது

நான்கு வருடங்கள் முடிவடைந்துவிட்டன. போர் அழிவில் இருந்து மீளுவதற்கான

புணரமைப்பு புணர்வாழ்வு நடவடிக்கைகள் அர்த்தமுள்ள வகையில்

முன்னெடுக்கப்படவில்லை. இராணுவம் கையப்படுத்தியுள்ள மக்களின் காணிகள்

அனைத்தும் இன்னும் பூரணமாக விடுவிக்கப்படவில்லை. காணாமல்

ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு

இழப்பீடோ நிவாரணமோ வழங்கப்படவில்லை. இன்னும் அரசியல் கைதிகள்

சிறைகளில் இருக்கின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு

வாக்குறுதியளித்திருந்த போதும் போர் குற்ற விசாரணைகள்

மேற்கொள்ளப்படவில்லை. நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறிக்

கொண்ட போதும் குறிப்பாக எந்த நடவடிக்கையையும் சொல்ல முடியாது. வேறுவேறு

வடிவங்களில் வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பும் திட்டமிட்டப்பட்ட குடியேற்றங்களும்

நடைபெற்று வருகின்றன. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதாக

கூறினாலும் ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தும் புதிய அரசியல் யாப்பிற்கான

இடைக்கால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் எல்லாமே

ஸ்தம்பிதமடைந்துள்ளன.

 

  1. தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இன்னும் இந்த மைத்திரி

ரணில் கூட்டரசாங்கத்திடம் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதுடன் அதனை

நியாயப்படுத்தி கொண்டிருக்கின்றது.

  1. வட மாகாண சபைக்கு 13வது திருத்திச் சட்டத்தின் கீழும் மாகாண சபை

சட்டத்தின் கீழும் இருக்கும் அதிகாரங்களைக்கூட பிரயோகிக்க முடியாத சூழ்நிலை

தொடர்கிறது.

  1. இவற்றை கேள்விக்கு உட்படுத்துபவர்களை தமிழரசுக் கட்சியில் இருந்து தமிழ்

தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழரசுக் கட்சி

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் எடுத்து வருகின்றன. மேலும் மேலும்

அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணிக்கொண்டு அதனை கேள்விக்கு

உட்படுத்துபவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.

இந்த பின்புலத்தில் அனந்தி சசிதரன் ஆகிய நானும் எனது ஆதரவாளர்களும்

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கான சுயாட்சியை வென்றெடுக்கும் அரசியல்

நடவடிக்கைகளை முன்னெடுக்க இப்புதிய கட்சியை கட்டுகின்றனர்.

மாறுபட்ட சூழ்நிலை

போர் இல்லை. ஜனநாயகம் நிலவுவதான தோற்றப்பாட்டில் வேறு வேறு விதமான

உரிமை மறுப்புகளும் இனப் பாரபட்சங்களும் ஒடுக்கல்களும் தொடர்கின்றன.

அரசியல் தீர்விற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

பொறுப்புக்கூறலுக்கும் நல்லிணக்கத்திற்குமான இலங்கை அரசிற்கு எதிரான ஐ.நா.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும்

திசையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. அத் தீர்மானத்தை

நிறைவேற்றும்படி பேரவையோ வெளிநாடுகளோ பெரிய அழுத்தம் கொடுப்பதாக

இல்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியானதாக இருந்த போதும் 13வது

திருத்தச் சட்டத்தின் கீழான வடக்கு கிழக்கு இணைப்பு தற்போது இல்லை. மாகாண

சபைகளுக்கு எழுத்தில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட காணி மற்றும் பொலிஸ்

அதிகாரங்களும் நடைமுறையில் இல்லை. 13வது திருத்தச் சட்டத்தை கொண்டுவர

காரணமாக இருந்த இந்திய அரசாங்கத்திடம் உறுதியான கோரிக்கை ஒன்றை

முன்வைக்கிறேன். தென்னாசிய பிராந்தியத்தில் இந்திய பேரரசின்

கௌரவமும்

ஈழத் தமிழ் மக்களின் இறைமையும் ஒரே புள்ளியில்

சந்திக்கத்தொடங்குகின்றன. இவ்வேளையில் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட

மாகாண சபை முறைமையை முதற்கட்டமாக கொண்டு சுயாட்சி அமையுமானால் அது

பிராந்திய நலனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கும்

வழி கோலுவதாக அமையும் என உறுதியாக நம்புகின்றோம்.

தனியொரு தமிழர் கட்சி அல்லது அமைப்பு பலமாக இல்லை. தமிழ் தேசிய

கூட்டமைப்பு ஐக்கியமாக இல்லை. இருக்கின்ற தமிழ் கட்சிகளிடம் பொதுவான

புரிந்துணர்வு இல்லை. கிழக்கு மாகாண தமிழ் அமைப்புகள் தனியான

 

5

 

அமைப்பாக்கத்திற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன. வடக்கு கிழக்கு தமிழ்

மக்களின் பொதுவானதும் வடக்கினதும் குறிப்பான கிழக்கினதும் குறிப்பான

நிலைமைகளை புரிந்து கொண்டு பொதுவான வேலைத்திட்டங்கள்

வகுக்கப்படவில்லை அதற்கான அமைப்புகளும் இல்லை.

மாகாணங்களுக்கு கூடிய அதிகாரங்களை உறுதி செய்யும் அரசியல் யாப்பை

மைத்திரி ரணில் கூட்டரசாங்கம் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்க முடியாது.

தென்னிலங்கையில் பேரினவாத மோலாதிக்க பேரினவாத சிந்தனை இன்றைய

சூழலில் மேலெழுந்துள்ளது. தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை உறுதி செய்யும்

அரசியல் யாப்பை அல்லது சாதாரண மாற்றங்களுடனான யாப்பை கூட 2/3

பெரும்பான்மையுடனோ பொது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலமோ

நிறைவேற்ற முடியாது.

மாறியுள்ள இந்த சூழ்நிலையில் தமிழர்களின் கோரிக்கை என்ன அதனை எப்படி

வெளியரங்கப்படுத்துவது அதனை எவ்வாறு வென்றெடுப்பது போன்றவற்றுக்கு

தமிழரசுக் கட்சியிடமோ தமிழ் தேசிய கூட்டமைப்பிடமோ ஏனைய கட்சிகளிடமோ

விடை இருப்பதாக தெரியவில்லை. அதனால் ஈழத் தமிழர் சுயாட்சி கழகம்

முதற்கட்டமாக சிலவற்றை மக்கள் முன்னிலையில் வைக்கிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் முன்னுரிமை அடிப்படையில் போரின்

அழிவுகளிலிருந்து முற்றாக மீளவும் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகள்

முன்னெடுக்கவும் காணிப்பிரச்சினை,  மீள்குடியேற்றம், காணாமல் போனோர்

பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றவை தீர்க்கப்பட துரித

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சுயநிர்ணய உரிமையானது தமிழருக்கு வரலாற்று மரபுவழி வந்தது. 2009 வரை

நடைபெற்ற இன அழிப்பில் முடிந்து போன யுத்தம் எமது சுயநிர்ணய

கோரிக்கையை மேலும் வலியதாக்குகின்றது. வரலாற்று ரீதியான வந்த

சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கவோ, மறுக்கவோ எவருக்கும் உரிமை

கிடையாது.

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு கிழக்கு இணைந்த

மாகாணத்திற்கு மக்களின் இறைமையை கொண்ட சுயநிர்ணயத்தை அடிப்படையாக

கொண்ட உயர்ந்தபட்ச சுயாட்சி வேண்டும். இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்

மக்களின் தேசிய அபிலாசைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் அரசியல்

கட்டமைப்பானது அடிப்படையான அதன் வாக்களிக்கும் மக்களிலிருந்தும், தமிழ்

தேசிய மக்களை பிரதிபலிக்கும் அடி மட்டத்திலிருந்தும் கட்டியமைக்கப்பட

வேண்டும். ஆனால் தற்போது நடைபெறுவதோ தலைகீழாக உள்ளது. மக்களால்

வாக்களித்து தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு

மாறாக தமது சுய இலாபம் சார்ந்த சிந்தனைகளை, கருத்துக்களை தமக்கு வாக்களித்த

தமக்கு ஆதரவளித்த மக்கள் மீது இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும்

திணித்து வருகின்றார்கள். இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் தமிழ்

 

6

 

தேசிய அரசியல் விருப்பை நிர்மூலமாக்கிவிடக்கூடியது. இந்த நிலைமை

மாற்றியமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களினதும் மலையக

தமிழர்களினதும் தேசிய அபிலாசைகளும் உறுதி செய்யப்படல் வேண்டும்.

அவற்றை வென்றெடுக்க கட்சிகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் அரசியல்

செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாகாண, பாராளுமன்ற அரசியலுக்கு

அப்பால் இந்நாட்டின் அனைத்து மக்களின் மற்றும் ஒருமைப்பாட்டுடன் சமூக ஒப்பந்த

அடிப்படையில் சுயாதீனமாக, ஒரு தேசிய இனத்தின் தேசிய அபிலாசை இன்னொன்று

ஏற்றுக் கொண்டு சுயமாக ஐக்கியப்பட்டு செயற்படும் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கள் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் மக்களின் தேசிய

அபிலாசைகளை அங்கீகரிக்கும் அமைப்புகளுடன் புரிந்துணர்வுடன் செயற்பட

வேண்டும.

பெண்களை சரிசமனாக நடத்திய ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் நாம்.

குடும்ப தலைவரை இழந்தோர், உழைப்பாளரை இழுந்தோர், பெண் தலைமைத்துவ

குடும்பங்கள் இலட்சக்கணக்கில் தலைமை தாங்கும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்

சமூகத்தில் அக்குடும்பங்களின் சமூக, பொருளாதார, கலாச்சார விடயங்களை

மேம்படுத்துவதற்கும், பேணிப்பாதுகாப்பதற்கும் அவர்களின் துயர்களை

தீர்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்ட, சிறைகளின் அடைக்கபட்டுள்ளோரின்

யுத்தம் காரணமாக தாயகத்தை பிரிந்து வாழ்வோரின் குடும்பங்களை

மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு சமஅந்தஸ்து நிலைநாட்டப்படுவதை ஈழத் தமிழர்

சுயாட்சிக்கழகம் உறுதிப்படுத்த முனைகிறது.

உலக நாடுகளில் விடுதலைக்காகவும் சமூக நீதிக்காகவும் சமூக

மாற்றத்திற்காகவும் செயற்படும் அமைப்புகளுடனும் மேலாதிக்கத்திற்கு எதிரான

அமைப்புகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை

பலப்படுத்தி இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதுடன் தமிழ் மக்களின் தேசிய

அபிலாசைகளுக்கும் ஆதரவான நாடுகளினதும் மக்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்

கொள்ள வேண்டும். இந்திய அரசு மற்றும் குறிப்பாக தமிழக மக்களின் ஒத்துழைப்பை

பெற்றுக் கொள்ள வேண்டும்.

உள்கட்சி ஜனநாயம், கொள்கை, பற்றுறுதி, அதன் கொள்கைகள் நாளடைவில்

மாற்றமடைந்து சென்று மக்களின் தேவை, அபிலாசைகளை புறக்கணிக்கும் விதமாக

நடைபெறும் அரசியலை எமது மக்கள் வெறுக்கத்தொடங்கி விட்டார்கள். கடந்த சில

வருடங்களில் தமிழ் தேசிய அரசியலில் ஏற்பட்ட தவறுகள், தடம்புரல்ழல்கள்

எமது மக்களின் மனதை ஆழப்பாதித்து விட்டது. இதற்கு ஒரு தீர்வை நாம் முதலில்

கண்டாக வேண்டும். இதற்கொரு தீர்வை நாம் உடனடியாக கண்டாக வேண்டும்.

 

7

மேற்படி விடயங்களுக்காக ஈழத் தமிழர் கழகத்தை பலமாக கட்டி

வளர்ப்பதுடன் மக்கள் அமைப்புகளையும் கட்டி வளர்ப்பதுடன் தேசிய

அபிலாசைகளை வென்றெடுக்க தனிநபர்களையோ, அமைப்புக்களையோ மட்டும்

நம்புவதை விட பூரணமாக மக்களை மையப்படுத்திய புதிய வழிமுறைகளுடன்

முன்னேற வேண்டும்.

 

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து

போயுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய

உணர்வாளர்கள் தமது தமிழ் தேசிய உணர்வை அடைவதற்காக பல்வேறு திசைகளில்

பயணிக்க தொடங்கியுள்ளார்கள். இவர்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய

அத்தியாவசியம் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. இக்கடமைப்பொறுப்பை

நிறைவேற்றுவதற்கு ஈழத்  தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு அனைவரினதும் உணர்வு

பூர்வமான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம

திருமதி அனந்தி சசிதரன்

செயலாளர் நாயகம்

திருமதி அனந்தி சசிதரன்

செயலாளர் நாயகம்

ஈழத்தழிழர் சுயாட்சி கழகம்

யாழ்ப்பாணம்

21.10.2018

 

SHARE