யாழ்ப்பாணத்தில் சற்று வித்தியாசமான யுத்தம் இடம்பெறுகின்றது, இந்தயுத்தம் குப்பைகளிற்கு எதிரானது.
யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கல்லுண்டாய் வெளியில் தினமும் குவியும் சுமார் 80 மெட்ரிக்தொன் கழிவுகளால் யாழ்நகரத்தின் சனத்தொகையின் குறிப்பிடத்தக்க அளவினர் பாரிய நோய் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இது குறித்து வடமாகாண முதலமைச்சரே ஆழந்த கவலைகொண்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் உள்ளன,யாழ் மாநாகரசரப இதற்கு தீர்வு காண மிகக்கடுமையாக முயல்கின்றது என அவர் தெரிவித்தார்,அடுத்த சில மாதங்களில் இதற்கு தீர்வை காணமுடியுமா என நான் சந்தேகம்கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இது பாரிய பிரச்சினை இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது, மல்லாகம் நீதிமன்றம் என்னை அடுத்த மூன்று மாதங்களிற்குள் இதற்கு தீர்வை காணணுமாறு பணித்துள்ளது என குறிப்பிட்டார்,யாழ் மாநாகரசபையின் மாநாகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் தெரிவித்தார்.
2007 ம்ஆண்டின் யாழ்மாநகர சபை அறிக்கையின் படி 9,072மெட்ரிக்தென் திண்ம கழிவுகளை மாத்திரம் அகற்றவேண்டியிருந்தது, கடந்த 8 வருடங்களில் இது பல மடங்காக (200வீதம்) அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவேண்டும். நான் அதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் என்றார் அவர். காக்கைதீவில் மாத்திரம் மீள்சுத்திகரிப்பு வசதி காணப்படுகின்றது,அவற்றால் கழிவுகளில் 50 வீதத்தை மாத்திரம் கையாள முடியும் விரைவில் மூன்று இயந்திரங்களை கொண்டுவரவுள்ளோம் என அவர் தெரிவித்தார்,