யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த கூட்டத்திற்கு எந்தவொரு அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.