யாழ்ப்பாணத்தில் ‘பாலை நிலம்’ திரைப்படத்திற்கான பூஜை நிகழ்வுகள்  

112
‘பாலை நிலம்’ முழுநீள திரைப்படத்தின் பூஜை நிகழ்வுகள் கடந்த 01.09.2018 அன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ‘திறி ஏ மூவி’ தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாலை நிலம் திரைப்படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான யூட் சுகி தலைமையில் நடைபெற்ற படப் பூஜை நிகழ்வில் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பாலைநிலம் திரைப்படமானது நான்கு பாடல்கள், சண்டைப்பயிற்சி என முழு நீளத்திரைப்படமாக அமையவுள்ளது.
பாலைநிலம் திரைப்படத்திற்கான சினிமா உபகரணங்களை ‘திறி ஏ மூவி’ தயாரிப்பு நிறுவனம் வழங்கவுள்ளது.
இப்படத்தில் வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஆர். காந்தன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சண்டைப்பயிற்சியை வடக்கு மாகாண வூசூ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ். நந்தகுமார் நெறிப்படுத்துகிறார்.
மேலும் பாலை நிலம் திரைப்படத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல நடிகரான கலைஞானச்சுடர் ஆர்.மகேந்திரசிங்கம், பிரபல நாடக கலைஞர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தில் ஏ.பிரசாந் இசையமைத்துள்ளதுடன், பாடல் வரிகளை திருமலை ரதி தனஞ்சயன் மற்றும் எஸ்.றொனால்ட் ஆகியோர் எழுதியுள்ளனர்.
பாலைநிலம் திரைப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் அபிரா அறிமுகமாகிறார்.
இத்திரப்படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான யூட் சுகி எமது தேசத்தின் மண்வாசனையை பதிவு செய்ய முயற்சித்துள்ளேன், இது ஒரு ஜனரஞசகமான படமாக அமையும் என தெரிவித்தார்.
பாலைநிலம் திரைப்படத்தின் பூஜையை தொடர்ந்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டது.
SHARE